[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

டென்னிஸ் பயிற்சி முகாமில் நடனமாடிய சானியா

sania-mirza-says-mithali-raj-has-been-performing-amazingly-for-many-years

சர்வதேச மகளிர் டென்னிஸ் சங்கம் சார்பில், இளம் டென்னிஸ் வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. 

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாலிவுட் நடிகை நேகா துபியா, ஆசிய பசுபிக் மகளிர் டென்னிஸ் சங்க துணைத் தலைவர் மெலிசா பைன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது சானியா மிர்சா உள்ளிட்டோர், நடனமாடி வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினர். 14 மற்றும் 16 வயதிற்கு உட்பட்ட வீராங்கனைகளுக்கான ஆசிய - பசுபிக் டென்னிஸ் தொடர், சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. இதனை பிரபலப்படுத்தும் வகையில், பயிற்சி முகாம் நடந்தது. நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சானியா, இந்தியாவில் மகளிர் டென்னிஸ், மிகப்பெரிய வளர்ச்சி அடைய வேண்டும் என்றும் அதற்கான தேவைகளை இந்த பயிற்சி முகாம்கள் பூர்த்தி செய்யும் எனவும் கூறினார். மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி சிறப்பாக விளையாடியதற்கு சானியா பாராட்டு தெரிவித்தார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close