[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்
  • BREAKING-NEWS தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

பங்களாதேஷ் பதுங்குமா? பாயுமா?

champions-trophy-bangladesh-to-meet-india-today

இங்கிலாந்தில் நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இன்று பங்களாதேஷை எதிர்கொள்கிறது இந்தியா. இறுதிபோட்டியில், இந்தியா- இங்கிலாந்து அணிகள்தான் மோதும் என பலர் கணித்திருந்தனர். ஆனால் அந்த கணிப்பெல்லாம் பொய்யாய் போயிருக்கிறது.

இந்திய அணி, லீக் சுற்றில் பாகிஸ்தானிடம் அபாரமாக வென்றாலும் 321 ரன்கள் குவித்தும் இலங்கையிடம் மண்ணைக் கவ்வியது. அடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 191 ரன்களில் அந்த அணியை சுருட்டி வென்றது. அதனால் இந்திய அணி இந்தப் போட்டியிலும் கவனமாக ஆடும் எனத் தெரிகிறது. இந்திய அணியில், தவான், ரோகித் சர்மா, கேப்டன் கோலி, யுவராஜ், டோனி என பேட்டிங் வரிசை ஸ்ட்ராங்காக இருந்தாலும் பந்துவீச்சை நம்ப முடியவில்லை.

ஒரு காலத்தில் கத்துக்குட்டியாக இருந்த பங்களாதேஷ் இன்று கத்தும் குட்டியாக வளர்ந்திருக்கிறது. அனைத்து அணிகளுக்கும் அந்த டீம் சவாலாகவே விளங்குகிறது. இந்திய அணியுடன் விளையாடும் போது வெறிகொண்டு விடுகிறார்கள் அவர்கள் என்பதால் இன்று நடக்கும் போட்டியை வெல்ல அந்த அணி கடுமையாகப் போராடும் எனத் தெரிகிறது.

பங்களாதேஷ் அணி பேட்டிங், பந்துவீச்சில் சிறப்பாக விளங்குகிறது. தமிம் இக்பால், ‌ஷகிப் அல் ஹசன், மகமுதுல்லா சபிர் ரகுமான், முஷ்பிகுர் ரஹிம் சிறப்பாக ஆடி வருகின்றனர். அதனால் இந்த போட்டி சாதாரணமானதாக இருக்காது என்கிறார்கள்.

இந்தியாவும், பங்களாதேஷும் இதுவரை 32 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 26ல் இந்தியாவும், 5ல் பங்களாதேஷும் வெற்றிபெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை. சாம்பியன்ஸ் கோப்பையில் இந்த இரண்டு அணிகளும் மோதுவது இதுவே முதல் முறை.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close