[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

ஊக்கமருந்து சர்ச்சை: நர்சிங் யாதவ் வழக்கை கையிலெடுத்தது சிபிஐ

narsingh-yadav-dopping-case-cbi-register-case

மல்யுத்த வீரர் நர்சிங் யாதவுக்கு சர்ச்சைக்குரிய வகையில் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக கடந்த ஜூலை மாதம் தேசிய விளையாட்டு ஆணைய விடுதியில் தங்கியிருந்த நர்சிங் யாதவ்விடம் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் அவரது உடலில் தடை செய்யப்பட்ட வேதியியல் பொருட்கள் கலந்திருந்தது தெரியவந்தது. எனினும் தம்மீது எந்த குற்றமும் இல்லை என நர்சிங் யாதவ் தெரிவித்தார்.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மீது எந்த தவறும் இல்லை என தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை தெரிவித்தது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை, விளையாட்டுப் போட்டிகளுக்கான சர்வதேச தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தது. இதில், நர்சிங் யாதவ்-விற்கு 4 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக நர்சிங் யாதவால் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அவரின் மல்யுத்த வாழ்க்கையே முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டது.

இதனையடுத்து, தமக்கு எதிராக சதி நடந்துள்ளதாக நர்சிங் யாதவ் அளித்த புகாரின் பேரில் ஹரியானா காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை கையிலெடுத்த சிபிஐ, மறு வழக்குப்பதிவு செய்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close