சிலர் ஒரு சில விஷங்களை தீர்மானமாக எடுத்துக்கொண்டு அதனை செயல்படுத்தியே ஆகவேண்டும் நினைக்கிறார்கள். அவர்கள் அதற்கு எடுத்துக்கொள்ளும் ரிஸ்க் மிக ஆபத்தானது என்றாலும் செய்தே தீர வேண்டும் என்று ஆசைப்பட்டு செய்துவிடுகிறார்கள். ஆனால் அதில் உள்ள ஆபத்தால் அவர்கள் இறந்துவிடுகிறார்கள் என்பது வருந்தத்தக்கது.
நவீன கால புதிய வார்த்தை செல்பி. இந்த பெயர் பலரை பைத்தியமாக்கி வருவது என்பது யதார்த்தமாகிவட்டதாக கூறப்படுகிறது. செல்பி எடுத்து அதனை தங்களது சமூக வலைதளங்களில் போட்டு லைக் எதிர்பார்க்கும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதாம். இத்தகைய அபாயகரமான செல்பி எடுக்க முனைத்து பலர் தங்கள் உயிரை விட்டுள்ளனர்.
சிலர் உயரமான பாலத்தில் நின்று செல்பி எடுக்கிறார்கள், சிலர் ஓடும் ரயில் நின்று செல்பி எடுக்கிறார்கள், மலையின் உச்சியின் நின்றும், உயரமான கட்டத்தில் நின்றும் சிலர் செல்பி எடுக்கிறார்கள். சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட விலங்குளுடன் செல்பி எடுக்கிறார்கள். இத்தகைய அபாயகரமான செல்பிக்களில், மிக ஆபத்தான 10 செல்பிக்களை மேலே உள்ள சிலைடரில் பார்க்கலாம்.