[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS 5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்
  • BREAKING-NEWS காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்

தொடரும் பத்திரிகையாளர் கொலைகள்.. பதற வைக்கும் பன்னாட்டு ரிப்போர்ட்!

world-press-freedom-day-is-observed-every-year-on-3rd-of-may-around-the-world

பத்திரிகை சுதந்திரம். இந்த வார்த்தை எப்போதாவது ஒரு விவாத பொருளாகும். சினிமாவில் பல கிரிமினல் பேர்வழிகளை கிழித்து தொடங்கவிடும் காதாபாத்திரத்தில் நிச்சயம் ஒரு பத்திரிகையாளர் இருப்பார். அல்லது ஆளும் கட்சியை எதிர்த்து போராடும் ஒருவர் பத்திரிகையாளராக இருப்பார். பொதுவாக சொன்னால் பத்திரிகையாளன் என்பவன் நாட்டில் நடக்கும் சமூக கேடுகளை எதிர்த்து நிற்பவன். இது ஒரு வேலையல்ல; மோடி பாணியில் சொன்னால் சச்வுகிதார். அநியாயத்தை எதிர்த்து நிற்கும் காவலர்கள். ஆனால் இந்த வேலை செய்வது அவ்வளவு சுலபமல்ல. புள்ளிவிவரங்கள் அப்படிதான் சொல்கின்றன.

சில மாதங்களுக்கு முன் அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரை நோக்கி ஒரு கேள்வி மிகக் காட்டமாக முன்வைக்கப்பட்டது. உடனே ட்ரம்ப் ஆடிபோனார். அந்தப் பத்திரிகையாளரை பார்த்து அமைதியாக இருக்கும்படி சொன்னார். இறுதியில் அவரை அவையில் இருந்து அப்புறப்படுத்துங்கள் என்றார். அந்தளவுக்கு ஒரு அதிபரை நேரடியாக கேள்வி கேட்ட சிஎன்என் செய்தியாளர் மீது பாய்ந்தது ஒரு பாலியல் குற்றச்சாட்டு. இதை கண்டித்து பல நாட்டு ஊடகவியலாளர்கள் கடுமையான கண்டனத்தை முன்வைத்தனர். 

அதிபர் ட்ரம்புக்கு பத்திரிகையாளர்கள் என்றாலே கொஞ்சம் அல்ல அதிகம் அலர்ஜி. அவருக்கு மட்டுமா? ஆளும் அரசிலிருந்து அடிமட்டமாக இருக்கின்ற ஊழல் பேர்வழிகள் வரை என அனைவருக்கு ஊடகவியலாளர்களை கண்டால் அலர்ஜிதான். அதிபர் ட்ரம்ப் பதவிக்கு வரும் முன்பிருந்தே அவர் ஊடகத்தை கடுமையாக விமர்சித்தார். ஆட்சிக்கு வந்த பிறகும் அது தொடர் கதையானது. “பத்திரிகையாளர்கள் மக்களின் எதிரி” என்று அவர் அறைகூவல் விடுத்தார். ட்ரம்ப்பின் ஊடகத்திற்கு எதிரான பேச்சை வைத்து ஐநா நிபுணர்கள் சிலர் ‘ஊடகத்திற்கு எதிரான வன்முறை அதிகரித்து விட்டது’ எனக் கருத்து தெரிவித்தனர். 

ட்ரம்ப் மட்டுமா இப்படி? சவுதி மன்னர் ஆட்சியை எதிர்த்து எழுதிவந்த ’வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையாளர் ஜமால் கஷோகி நிலமை என்ன ஆனது என்பது இன்றுவரை மர்மம். துருக்கியிலுள்ள சவுதி தூதரகத்திற்குள் சென்ற அவர் என்ன ஆனார் என்பது உலகத்திற்கு இதுவரை தெரியவில்லை.

அவர் குறித்து வெளியான ஆடியோ, வீடியோ பதிவுகள் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறியது. அதனை சவுதி கடுமையாக மறுத்தது. தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு துருக்கி தோழியை மணம் முடிப்பதற்கான ஆவணங்களை பெறச் சென்ற அவர் இந்த உலகத்திலிருந்து மாயமானார். அவர் ஏதோ காணாமல் போனது காட்டில் இல்லை. சுதந்தரமான நாட்டில். அதுவும் அதிகாரபூர்வமான தூதரகத்தில். என்ன கொடுமை சார் இது?

இந்தியாவில் மட்டும் பத்திரிகை சுதந்திரம் தரமாக இருக்கிறதா என்ன? அதுவும் கவலைக்கிடம்தான். கடந்த 2018 பிப்ரவரி மாதத்தில் உள்துறை செயலகம் தாக்கல் செய்திருந்த அறிக்கையில், இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் பத்திரிகையாளர் மீதான வன்முறை சம்பவம் குறித்து 200 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறது. ‘ரிப்போர்டர் பார்டர்’ 2018 ஆண்டு ஆய்வின்படி பத்திரிகை சுதந்தரத்தில் உலக அளவில் 138வது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. 180 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த இடம் இந்தியாவிற்கு தரப்பட்டுள்ளது. இது தற்போதைய நிலை. அப்போ கடந்தகால வரலாறு?

‘ரைசிங் காஷ்மீர்’ பத்திரியாளர் சுஜாத் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 2016ல் ‘காஷ்மீர் ரீடர்’ பத்திரிகையின் செயல்பாட்டை தடை செய்தது இந்திய அரசு. பலத்த எதிர்ப்பு கிளம்ப, மூன்று நாளில் அந்த தடையை திரும்ப பெற்றது. யுனஸ்கோ ஆய்வில் 2012 -2016 வரையிலான ஆண்டுகளில் 530 பத்திரிகையாளர்கள் உலகம் முழுவதும் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ரிப்போர்ட்டின் மூலம் 18 பேர் இந்தியாவில் கொலை செய்யப்பட்டுள்ளது வெட்டவெளிச்சமானது.

கடந்த ஆண்டு மத்தியப் பிரதேச புலனாய்வு பத்திரிகையாளர் சந்திப் சர்மா மீது ட்ராக்டர் விட்டு சிலர் கொலை செய்துள்ளனர். மணல் கொள்ளைக்கு எதிராக எழுதியதற்காக இவர் கொலை செய்யப்பட்டார். மேலும் பீகாரை சேர்ந்த ஊடகவியலாளர் நவீன் நிஷ்சல், விஜய் சிங் மீது கார் ஏற்றிக் கொல்லப்பட்டனர். மேகாலயா ‘சிலாங் டைம்ஸ்’ பத்திரிகையாளர் மீது பொட்ரோல் உற்றி எரித்துள்ளனர். இதை தாண்டி கல்புரிகி, கெளரி லங்கேஷ் போன்றவர்கள் அடிப்படைவாதிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர். ‘தி ஹூட்’ 2018 ரிப்போர்ட் படி பார்த்தால் இந்தியாவில் 2 முறை நீதிமன்ற உத்தரவாலும் 8 முறை அரசின் செய்கையாலும் பத்திரிகை சுகந்திரம் பாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. 

அருகிலுள்ள இலங்கையில் பல ஆண்டுகளுக்கு முன் பத்திரிகையாளர் லசந்தா விக்ரமதுங்க, அவரது பத்திரிகை அலுவலகத்திற்கு உள்ளாகவே சுட்டுக் கொலை செய்யப்பட்டார். ஜே.எல். திசைநாயகத்திற்கு அங்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா இதனை கடுமையாக எதிர்த்தார். இதே போல மியான்மரில் ரோஹின்யா முஸ்லிம்கள் கும்பல் கும்பலாக படுகொலை செய்யப்பட்ட போது அதற்கான ஆவணங்களை வெளியிட்ட இரண்டு பத்திரிகையாளர்கள் மீது 7 ஆண்டு சிறை தண்டனை ஏவியது அந்நாட்டு அரசு. வ லோன், கியாவ் ஆகிய இரு ராய்ட்டர் நியூஸ் பத்திரிகையாளர்களும் இந்தத் தண்டையை எதிர்த்தனர். “நான் இதற்கெல்லாம் அச்சப்படவில்லை” என்றார் வலோன். அவர் “ஜனநாயகத்தின் மீதும் சுதந்திரத்தின் மீதும் நம்பிக்கை உள்ளது” என்றார். ஆனால் அவர்கள் நம்பிக்கை பொய்த்து போனது.

1992 முதல் 2016 வரை இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள்  கொலை செய்யப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது. அதில் மிகப் பெரிய கொடுமை என்ன என்றால், இந்தக் கொலைக்கு காரணமாவனர்கள் யாரும் தண்டிக்கப்படவே இல்லை. இந்தியாவில் அடிப்படைவதிகள், மதவாதிகள் ஊடக சுதந்திரத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக சொல்லப்படுகிறது. காஷ்மீர் போன்ற பகுதிகளில் மீடியாவினால் சுதந்திரமாக செய்தி சேகரிக்க முடியவில்லை என்கின்றனர். இத்தனை பேரும் ஏன் கொலை செய்யப்பட்டுள்ளனர் தெரியுமா? அவர்கள் வேலையை அவர்கள் சரியாக செய்தார்கள் என்பதற்காக கொலை செய்யப்பட்டுள்ளனர். இது எவ்வளவு பெரிய அவமானம்? கொடுமை?

இந்தக் கதையெல்லாம் எதற்கு என்கிறீர்களா? இன்று மே 3தேதி. உலகப் பத்திரிகை சுதந்திர தினம் இன்று. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close