[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

அம்மா ஸ்கூட்டருக்கு அப்ளை பண்ணியிருக்கீங்களா... அப்ப இத படிங்க

amma-two-wheeler-scheme-issues

ஊரெல்லாம் ஒரே பேச்சா இருக்க லேட்டஸ்ட் டாப்பிக் அம்மா ஸ்கூட்டர். நம்ம பொண்ணுங்க எல்லாம் ஆர்டிஓ ஆபிசில கால் கடுக்க நின்னு, லைசன்ஸ் வாங்குற வேலைய பாத்துக்கிட்டு இருக்காங்க. ஆனா, மானிய விலை ஸ்கூட்டர் வாங்குறதுக்கு இவ்வளவு பேரு அடிச்சி புடிச்சி விண்ணப்பிக்கிறத பாக்குறப்போ எல்லாருக்கும் கிடைக்குமானு இயல்பாவே ஒரு கேள்வி எழுது. இந்த திட்டத்துல 1 லட்சம் பேருக்குதான் இந்த வருஷம் இருசக்கர வாகனம் வாங்க மானியம் தருவாங்கலாம் அரசாங்கம்.

இன்னும் என்னலாம் வெளியில தெரியாத விஷயங்கள் இருக்குனு தெரிஞ்சிக்க விரும்புறீங்களா. அப்போ தொடர்ந்து படிங்க.

வேலைக்கு போற மகளிர் வர்ற 10-ம் தேதிக்குள்ள இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கணும். அப்படி விண்ணப்பிச்ச அப்புறம், நீங்க கொடுத்திருக்க தகவல் சரிதானா அப்படினு ஒரு சரிபார்த்தல் நடக்கும். அதுல கொஞ்ச பேர நீக்கிருவாங்க.

அதுக்கு பிறகு, கள சரிபார்ப்பு. அதாவது , நீங்க கொடுத்திருக்க அட்ரஸ் சரியா இருக்கா, வேலைக்குதான் போறீங்களா? வருமானம் மானியத்துல பைக் வாங்குற அளவுக்குதான் இருக்கா ? இப்படி எல்லாத்தையும் சரிபார்ப்பாங்க. இதுல இன்னும் பாதிப்பேர காலி பண்ணிடுவாங்க.

அடுத்தது சூப்பர் செக் அப். அப்ளிகேஷன் ஓகே, இவங்கள இந்த திட்டத்துக்கு பரிசீலனை செய்யலாம்னு பரிந்துரை செய்யிற செக் அப்தான் சூப்பர் செக் அப். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் சூப்பர் செக் பண்றதுக்கு ஒரு அதிகாரிய நியமிப்பாங்க. அந்த  அலுவலர் அக்கு வேர், ஆணி வேர்னு எல்லாத்தையும் செக் பண்ணி , ஒரு லிஸ்ட மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பாரு. இந்த வெரிபிகேஷன்ல பாதிப்பேரு காலி. 

 
ஒரு வழியா பரிந்துரை பட்டியல் ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டதும், தேர்வுக்குழு கூடும். அது என்ன தேர்வுக்குழு? ஆமாங்க, ஒவ்வொரு மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் 3000 பேருக்கு மானியம் கிடைக்க வாய்ப்பிருக்கு. எனவே அந்த 3000 பேரு யாருனு செலக்ட் பண்றதுக்கு 8-10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கு. அவங்க பேருதான் தேர்வுக்குழு. மாவட்ட ஆட்சியர் அல்லது மாநகராட்சி ஆணையர் அந்த குழுவோட தலைவரா இருப்பார்.

இப்படிலாம் பல கட்ட சோதனைக்கு பிறகு பயனாளார்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள். அப்படி கண்டுபிடிக்கப்படுவர்கள் 125 சிசி திறன் கொண்ட வாகனம் , கியர் இல்லாத வாகனம் மட்டுமே வாங்க முடியும். அப்படி வாங்கப்படும் வாகனத்துக்கு அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் அல்லது வண்டியின் விலையில் பாதி , இவை இரண்டில் எது குறைவோ அந்த பணம் கொடுக்கப்படும்.

அப்புறமா சொல்ல மறந்துட்டனே, நீங்க மொதல்ல வண்டி வாங்கிட வேண்டும். அப்புறம் மானியத்துக்கு அப்ளை பண்ணனும். 45 நாள்ல அப்ளை பண்ணிட்டீங்கனா, உங்க பேங்க் அக்கவுண்ட்ல பணம் வந்துவிடும். லோன் வாங்குனா வங்கியும், பயனாளரும் சேர்ந்து கையெழுத்தெல்லாம் போட்டு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அனுப்பனும். அவங்க 24 மாசத்துக்குள்ள முடியிற மாதிரி தவணை முறை திட்டமெல்லாம் போட்டு பணம் கொடுத்துடுவாங்க..

ஒரு 25 ஆயிரம் பேருக்கு ஜெயலலிதாவோட பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி மானிய விலை ஸ்கூட்டர் வழங்க போறாங்க தமிழக அரசு. 3 கட்ட சரிபார்த்தலையும் 15-ம் தேதிக்குள்ள முடிச்சு, பயனாளர் லிஸ்ட்ட அனுப்ப சொல்லி உத்தரவு போட்ருக்காங்க.

அப்புறம் என்ன.. ஸ்கூட்டர் வாங்க ரெடியா மகளிரே… 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close