[X] Close
JUST IN
 • BREAKING-NEWS இணையதளத்தில் திருட்டுத்தனமாக படங்களை யாரும் பார்க்க வேண்டாம்; திரையரங்கில் பார்க்க வேண்டும் - விஷால்
 • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளித்து படிகாயமடைந்த இசக்கிமுத்துவை சந்தித்து ஆறுதல் கூறினார் திருமாவளவன்
 • BREAKING-NEWS பகுத்தறிவு என்று கூறி தமிழகத்தில் அடிப்படை அறிவை மழுங்கடித்துவிட்டார்கள்: ஹெச். ராஜா
 • BREAKING-NEWS பொருளாதார பிரச்னை குறித்து பேசுவோரை மதரீதியில் அடையாளப்படுத்துவது மோசமானது: கனிமொழி எம்.பி
 • BREAKING-NEWS சென்னையில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச். ராஜா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகார வழக்கில் விசாரணையை அக்.30ம் தேதிக்கு ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS விஷால் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தவில்லை: ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு விளக்கம்
 • BREAKING-NEWS நடிகர் விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம்: எஸ்.ஏ.சந்திரசேகர்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இன்று முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: விராட் கோலி தலைமையில் 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும்: திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி
 • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு; 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதி
சிறப்புக் கட்டுரைகள் 30 Sep, 2017 12:01 PM

மாடர்ன் உலகம் உறவுகளை தொலைப்பது வருத்தம்தான்: சசிகுமார்!

actor-sasikumar-talks-about-kodiveeran

ரிலீசுக்கு தயாராகிவிட்டது ’கொடி வீரன்’. ’குட்டிப்புலி’-க்குப் பிறகு முத்தையா, சசிகுமார் காம்பினேஷன் என்பதால் வரவேற்பு அதிகரித்திருக்கிறது. அண்ணன் - தங்கை கதையை கொண்ட இந்தப் படம் பற்றி கேட்டால்,  ‘அண்ணன்கள் - தங்கைகள் கதைன்னு
சொன்னா சரியாக இருக்கும்’ என்று திருத்துகிறார் சசிகுமார். ‘மூணு வெவ்வேறு அண்ணன்கள், தங்கச்சிகளோட கதை இது. அதனால சென்டிமென்ட், ஆக்‌ஷன், கோபம், ஆக்ரோஷம், பகை எல்லாமே இதுல இருக்கும்’ என்கிறார்.

முத்தையா இயக்குற படம்னாலே, இப்படித்தான் இருக்கும்னு சொல்றாங்களே?

எப்படி..?

கிராமம், சொந்தக்காரங்க பிரச்னை, சென்டிமென்ட், திமிரான ஹீரோ, அடிதடி..?

அவரோட முந்தைய படங்களை பார்த்துட்டு இப்படி சொல்லலாம். இதுல என்ன தப்பு இருக்குன்னு எனக்குத் தெரியல? இன்னைக்கு மாடர்ன் உலகம், உறவுகளை இழந்துட்டு வருது. பெரும் குடும்பமா, கூட்டுக் குடும்பமா வாழ்ந்த வாழ்க்கை இன்னைக்கு இல்லை. தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பான்னு பரந்து விரிஞ்ச சொந்தங்களும் உறவு முறைகளும் இன்னைக்கு குறைஞ்சுடுச்சு. அதாவது கொஞ்சம் கொஞ்சமாக நம்ம கலாசாரத்தை இழந்துட்டு வர்றோம். இந்த மாதிரி நேரத்துல அதை சொல்றது நம்ம கடமைன்னுதான் நினைக்கிறேன்.

’கொடிவீரன்’ல என்ன சென்டிமென்ட்?
அண்ணன் தங்கச்சி சென்டிமென்ட்தான். ஆனா, இதுவரை பார்த்திராததா இருக்கும். அதே நேரம் உட்கார்ந்து கண்ணை கசக்க வைக்கிற மாதிரி சோகத்தை பிழியறதா இருக்காது. அண்ணன்- தங்கச்சின்னா அதுமட்டும் இல்லையே... அதைதாண்டிய விஷயமா இருக்கும்.

பூர்ணா மொட்டை போட எப்படி சம்மதிச்சாங்க..?
’சவரக்கத்தி’ டிரைலர் பார்த்துட்டுதான் பூர்ணாகிட்ட பேசினோம். அதுல அவங்க சிறப்பா நடிச்சிருந்தாங்க. இந்தப் படத்துல அவங்களுக்கு முக்கியமான கேரக்டர். மொட்டை அடிக்கணும்னு சொன்னோம். அவர் தயங்கினார். பிறகு கதையை கேட்டார். கண்டிப்பா
மொட்டை அடிக்கிறேன்னு சொன்னார். எந்த நடிகையும் இதுக்கு துணிச்சிருப்பாங்களான்னு எனக்கு தெரியலை. ஏன்னா, நடிகைகளுக்கு அழகான கூந்தல் முக்கியம். அதை இழக்க எந்த நடிகையும் தயாரா வரமாட்டாங்க. உண்மையிலேயே அவங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

படத்துல நிறைய வில்லன்கள்...
நிறைய பேர் நடிச்சிருக்காங்க. மகிமா நம்பியார் ஹீரோயின். சனுஷா தங்கச்சி. பசுபதி நடிச்சிருக்கார். ’மதயானைக் கூட்டம்’ டைரக்டர் விக்ரம் சுகுமார் ஒரு வில்லன். இன்னொரு வில்லனா, ’குற்றம் 23’ தயாரிப்பாளர் இந்தர்குமார் பண்ணியிருக்கார். இன்னும் சில வில்லன்கள் இருக்காங்க. 

கிளைமாக்ஸ்-க்காக செயற்கை குளம் உருவாக்கினீங்களாமே?
ஆமா. படத்தோட கிளைமாக்ஸ் பேசப்படறதா இருக்கும். இதுக்காக மதுரை பக்கம் ஏற்கனவே காயஞ்சு போய் கிடந்த குளத்துல, லாரி லாரியா தண்ணியை ஊற்றி, அலை மோதுற குளமாக்கினோம். அங்க மீன் பிடி திருவிழா நடத்தினோம். அதுலதான் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி. ரொம்ப ரிஸ்க்கான காட்சி. 4 கேமரா வச்சு இதை ஷூட் பண்ணினோம். படத்தோட ஹைலைட்டா அது இருக்கும். 

அடுத்து..?
ஆக்‌ஷன் த்ரில்லர் படத்துல நடிக்கிறேன். ’சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தை இயக்கிய மருதுபாண்டியன் இயக்குறார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close