[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அமைச்சர்களும் நாளை சென்னையில் இருக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
  • BREAKING-NEWS நீட்தேர்வு விவகாரத்தில் நாளை எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கு திவாகரன் ஆதரவு
  • BREAKING-NEWS ஆட்சிக்கும் கட்சிக்கும் தொல்லை கொடுக்க சிலர் முயற்சிக்கின்றனர்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS சிறப்புப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது
  • BREAKING-NEWS சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி ஈபிஎஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: முத்தரசன்
  • BREAKING-NEWS உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சாய்னா முன்னேற்றம்
  • BREAKING-NEWS வேளாண் இளநிலை பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு வரும் 28ஆம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது
  • BREAKING-NEWS தொடர் ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவிப்பு
  • BREAKING-NEWS அதிமுக பொதுக்குழுவை கூட்டும் போது யாருக்கு வலிமை எனத் தெரியும்: எம்எல்ஏ ஆறுகுட்டி
  • BREAKING-NEWS தற்காலிகமாக மூடப்பட்ட வெள்ளை மாளிகை
  • BREAKING-NEWS புதிய ரூ.200 நோட்டை அறிமுகப்படுத்துவதற்கான அரசாணை வெளியீடு
சிறப்புக் கட்டுரைகள் 17 Jun, 2017 05:35 PM

மொட்டை போட்டுக் கொள்ளும் புதுமைப் பெண்கள்

womens-new-trend

பெண்களுக்குக் கூந்தல்தான் அழகு என்று காலம் காலமாக போதிக்கப்பட்டு வந்தபோதிலும், அதற்காக மெனக்கெடும் நேரத்தைப் பெண்கள் ஆக்கப்பூர்வமாகப் பல வேலைகளைச் செய்யலாமே என்று கூறுகிறது மனிதி அமைப்பு. பெண்கள் ஒரு அழகு சாதனமல்ல எனும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அவர்கள் கூந்தல் வெட்டும் நிகழ்வு ஒன்றை அரங்கேற்றினார்கள். சென்னை, கந்தன்சாவடியில், அந்த நிகழ்ச்சி நடந்தது.

மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவில் ஒருவரான சுதாவிடம் பேசும் போது, ஆணுக்கு கண்ணும் கருத்தும், பெண்ணுக்கு கண் மையும், கருங்கூந்தலும் அழகென்று கற்பிக்கும் அடிமைத்தனத்திற்கும், அழகு சார்ந்து தனியார்மயம் இங்கு கட்டமைக்கும் வணிகத்தையும் எதிர்ப்பதே எங்கள் நோக்கம். அழகு என்பதன் அளவுகோல் பெண்ணுக்கும் ஆணுக்கும் பொதுவானதாக, இயல்பானதாக, பாரபட்சமற்றதாக, நியாயமாக இருக்க வேண்டும் என்றார். நறுக்கிய முடி, நன்மை தரட்டும் என்கிற உணர்வில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்க மனிதிகள் முன்வந்திருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

’முடி வெட்டுவது புரட்சியா? முடிவெட்டுவது எப்படி சமத்துவம் ஆகும்? என்று கேட்டதற்கு “முடியை வளர்த்து பராமரிக்கும் நேரத்திலும், முடிக்காக செலவிடப்படும் தொகையிலும் ஆக்கப்பூர்வமான பல விஷயங்களை செய்ய முடியும். முடியை நறுக்குவது மட்டுமே புரட்சி என்று நாங்கள் சொல்லவில்லை. இது ஒரு முன்னெடுப்புத்தான்” என்றார்.

மனிதி ஒருங்கிணைப்புக் குழுவின் மற்றொரு உறுப்பினரான சாரதா ராமன், “மனிதி அமைப்பு, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து விவாதிக்கும், செயல்படும் ஒரு வாட்சப் குழுவாகத்தான் தொடங்கியது. உறுப்பினர்களின் முயற்சியால் தற்போது ’மனிதி’ என்னும் அமைப்பாக பெண் விடுதலையை அழுத்திப்பேசும், குடும்ப வன்முறை, சமூக கூட்டு மனப்பான்மை என்னும் ஆணாதிக்க கூறுகளை எதிர்த்து செயல்பட்டுவருகிறது. முற்போக்கான விஷயங்களை தனது வாழ்க்கையில் யார் நடைமுறைப்படுத்தினாலும், அவர்களுக்கு முதல் எதிர்ப்பு குடும்பத்தில் இருந்துதான் எழும். பெரியாரின் கருத்துக்களை ஏந்தி இந்த நிகழ்வை நடத்துகிறோம். கடந்து போகும் ஒரு பெண், இதுகுறித்து சிந்திக்கத் தொடங்கினால் எங்களது முயற்சி வெற்றிதான் என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close