[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா

வங்கிகளில் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இந்த விண்ணப்பம் அவசியம்

you-will-need-this-form-to-give-back-your-old-rs-500-rs-1000-notes

வங்கிகளில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அடையாள அட்டையுடன் விண்ணப்பம் ஒன்றையும், வாடிக்கையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களிடமுள்ள பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை நவம்பர் 10 முதல் டிசம்பர் 30 வரை மாற்றிக் கொள்ளலாம் என்று என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, உரிய அடையாள அட்டையுடன், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விண்ணப்பத்தையும் பணத்தினை மாற்ற நினைப்பவர்கள் வங்கிகளில் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள்:

* வங்கியின் பெயர் மற்றும் கிளை

* விண்ணப்பதாரரின் பெயர்

* சமர்ப்பிக்கப்படும் அடையாள அட்டையின் பதிவெண்

* சமர்ப்பிக்கப்படும் ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை போன்ற தகவல்களைப் பூர்த்தி செய்து கையெழுத்து மற்றும் நாள், இடம் ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.

எந்தெந்த அடையாள அட்டைகளைப் பயன்படுத்தலாம்:

* ஆதார் அட்டை

* ஓட்டுனர் உரிமம்

* வாக்காளர் அடையாள அட்டை

* பாஸ்போர்ட்

* நூறுநாள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை

* மத்திய, மாநில அரசுகள் வழங்கிய அடையாள அட்டைகள்

* பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய அட்டைகள்

இதற்கான மாதிரி விண்ணப்பப் படிவத்தினை மேலே சிவப்பு நிறத்தில் காணப்படும் இணைப்பில் சொடுக்கி டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close