[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

வாட்ஸ் அப்பில் விரைவில் பூமராங் வீடியோ!

whatsapp-to-soon-get-instagram-s-boomerang-feature

பூமராங் வீடியோ வசதியை வாட்ஸ் அப் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது

உலகளவில் தற்போது அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ்அப் செயலியும் ஒன்று. செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் போன்ற பல்வேறு வசதிகளை வாட்ஸ் அப் கொண்டுள்ளது.

குறிப்பாக நண்பர்களுடன் அரட்டை, குரூப்கள் தொடங்கப்பட்ட அரட்டை என வாட்ஸ் அப் ஒரு அரட்டை தளமாகவும் இயங்கி வருகிறது. பயனாளர்களுக்கு வசதியாகவும், பாதுகாப்பு அம்சங்களுக்காகவும் வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது அப்டேட்டுகளை விடுத்து வருகிறது

இந்நிலையில் பூமராங் வீடியோ வசதியை விரைவில் வாட்ஸ் அப் அறிமுகம் செய்யவுள்ளது. பூமராங் வீடியோ வசதி தற்போது இன்ஸ்டாகிராமில் உள்ளது. இன்ஸ்டாவில் பலராலும் பயன்படுத்தப்படும் பூமராங் வீடியோ வாட்ஸ் அப்பிலும் பயனாளர்களை கவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

7 நொடிகளுக்குள் அடங்கும் பூமராங் வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பலாம் என்றும், வாட்ஸ் அப் ஸ்டேட்டசாக வைத்துக்கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவில் iOS பயனாளர்களுக்கு இந்த வசதி வரும் என்றும் அதற்கு பின்னர் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு அறிமுகமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close