[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து
  • BREAKING-NEWS உத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

பத்தாண்டுகளில் வழக்கொழிந்து போகும் கேட்ஜெட்டுகள்

gadgets-that-may-disappear-in-the-next-decade

புதிய கேட்ஜெட்டுகளின் வரவு நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில் அடுத்த பத்தாண்டுகளின் மக்கள் பயன்பாட்டிலிருந்து மறைந்து விடுவதாகக் கருதப்படும் சில எலக்ட்ரானிக் பொருட்களைப் பற்றி பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன்:

நம்புங்கள் மக்களே இன்றைய உலகையே ஆட்டிப்படைக்கும் ஸ்மார்ட்போன்கள் அடுத்த பத்தாண்டுகளுக்குப் பிறகு மக்கள் பயன்பாட்டில் இருந்து மறைந்து விடும் என்றே கருதப்படுகிறது. ஸ்மார்ட் போன்களில் இன்று நாம் மேற்கொண்டு வரும் செயல்பாடுகளை எந்த இடத்திலும், எந்த சூழலிலும் பயன்படுத்தும் வகையில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படலாம். எடுத்துக்காட்டாக கண்ணாடி போன்ற பொருள், சுவர், உள்ளங்கை போன்றவற்றை ஸ்மார்ட்போனாக பயன்படுத்தும் தொழில்நுட்பம் கைக்கு எட்டும் தூரத்திலேயே இருக்கிறது.

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு:

கடந்த சில ஆண்டுகளாக மக்களின் பேசுபொருளாக இருந்து வரும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் எனப்படும் கிரடிட், டெபிட் கார்டுகள் மக்கள் பயன்பாட்டில் இருந்து மறைந்துவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். எதிர்காலத்தில் உங்கள் வங்கிக் கணக்குடன் இணைந்த செயற்கை அறிவு கொண்ட செயலியின் உதவியுடன் நீங்கள் உங்கள் பணத்தினை செலவு செய்யும் சூழல் வரலாம்.

லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கணினிகள்:

நம்மில் பலரும் தற்போது விர்ச்சுவல் கீபோர்டினைப் பயன்படுத்தி வரும் நிலையில், ஸ்க்ரீனுக்காக சுவர்கள் மற்றும் துணிகளைப் பயன்படுத்தும் நிலை எதிர்காலத்தில் வரலாம். இந்த தொழில்நுட்பம் போன் பேங்கிங் போன்ற தொலைபேசி வழியிலான தொடர்புகளை அதிகப்படுத்தும் எனலாம். இதனால் தினமும் வீட்டிலிருந்து, அலுவலகத்துக்கு சென்று வரும் நேரமும் மிச்சமாகும் என்றும் கருதப்படுகிறது.

சுவரில் மாட்டும் டிவி:

மேஜை முழுவதையும் அடைத்துக் கொண்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டிகள் பரிணாம வளர்ச்சி பெற்று சுவரில் ஆணி அடித்து மாட்டி வைத்துக் கொள்ளும் படி மாறியது. இதுவும் அடுத்த கட்ட வளர்ச்சி பெற்று கண்ணாடிகளையே பயன்படுத்தும் நிலை வரும். இந்த தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே அறிமுகப்படுத்தி உள்ளது.

ரிமோட் கண்ட்ரோல்:

டிவி உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்களை உட்கார்ந்த இடத்திலிருந்தே கட்டுப்பாட்டில் வைக்கும் ரிமோட் கண்ட்ரோல் கருவிகள் காணாமல் போனோர் பட்டியலில் இடம்பிடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. குரல் மற்றும் உடலசைவு மூலம் கட்டுப்படுத்தப்படும் கருவிகள் எதிர்காலத்தில் உங்கல் வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கலாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close