[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

“பொருளாதார பிரச்னைக்கு மோடி அரசு எந்தத் தீர்வும் காணவில்லை” - மன்மோகன் சிங்

government-obsessed-manmohan-singh-s-comeback-to-finance-minister

நாட்டின் பொருளாதார பிரச்னைகள் அனைத்திற்கும் காங்கிரஸ் அரசை குறைகூறுவதை மோடி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

வங்கித்துறை தற்போது சந்தி்க்கும் பிரச்னைகளுக்கு காங்கிரஸ் அரசே காரணம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருந்த நிலையில் அதற்கு மன்மோகன் சிங் பதிலடி தந்துள்ளார். மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தங்கள் ஆட்சியிலும் சில குறைபாடுகள் இருந்ததை ஒப்புக்கொண்டார்.

ஆனால் அதற்கு தற்போதைய மோடி அரசு எந்தத் தீர்வும் காணவில்லை என்றும் மன்மோகன் சிங் தெரிவித்தார். எந்த ஒரு பொருளாதார பிரச்னைக்கும் 5 ஆண்டுகளுக்குள் தீர்வு கண்டுவிட முடியும் என்றும் அவர் விளக்கினார். எல்லா பிரச்னைகளுக்கும் காங்கிரசை கை காட்டுவது மூலம் மட்டும் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுவிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். 

தற்போதைய பொருளாதார பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாகவும் இதனால் மக்களின் எதிர்காலம்தான் பாதிக்கப்படும் என்றும் மன்மோகன் சிங் கவலை தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close