[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

“பங்களாவை காலி செய்யுங்கள் சந்திரபாபு நாயுடு” - ஒய்.எஸ்.ஆர் எம்.எல்.ஏ குரல்

chandrababu-naidu-has-to-vacate-his-bungalow-mla-alla-rk

ஆந்திரப்பிரதேச முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாடு தன்னுடைய பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏவான ராமகிருஷ்ண ரெட்டி கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலுடன் நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆளும் கட்சியாக இருந்த தெலுங்கு தேசம் வெறும் 23 இடங்களில் மட்டுமே வென்றது.  

          

இந்நிலையில், கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள உண்டவள்ளி கிராமத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள பங்களாவை சந்திரபாபு நாயுடு காலி செய்ய வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர் மங்களகிரி தொகுதி எம்.எல்.ஏவான ராமகிருஷ்ண ரெட்டி வலியுறுத்தியுள்ளார். சந்திரபாபு நாயுடு பங்களாவை காலி செய்யும் வரையில் இந்தப் பிரச்னையை விடமாட்டோம் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

             

தெலங்கானா மாநிலம் தனியாக பிரிந்த பின்னர், ஆந்திர மாநிலத்திற்கான நிர்வாகம் ஹைதராபாத் மாநிலத்தில் இருந்து விஜயவாடாவிற்கு மாறியது. அப்போது, கிருஷ்ணா நதிக்கரையில் கட்டப்பட்டிருந்த தனியார் வீடு ஒன்றினை முந்தைய சந்திரபாபு நாயுடு அரசு முதலமைச்சரின் அலுவலக பணிகளுக்காக லீசுக்கு எடுத்தது. பின்னர், அங்கு பிரஜா வேதிகா என்ற பெயரில் ஆலோசனை கூட்டங்களுக்கான வீட்டை கட்டினர்.

கிருஷ்ணா நதிக்கரையில் சுற்றுச் சூழலுக்கு புறம்பாக சந்திரபாபு நாடு வீடு இருக்கும் பகுதியில் வீடுகள்  கட்டப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் ராமகிருஷ்ண ரெட்டி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவகாரத்தில், மேற்கொண்டு அந்த வீட்டில் தங்குவதற்கு அனுமதி வழங்குமாறு சந்திரபாபு நாயுடு அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

                                                 

அரசு தரப்பில் இன்னும் பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில், பங்களாவை சந்திரபாபு நாடு காலி செய்ய வேண்டுமென ராமகிருஷ்ண ரெட்டி வலியுறுத்தியுள்ளார். இவர், ஆந்திரப்பிரதேச புதிய தலைநகரின் மேம்பாட்டு வாரியத்தில் தலைவராக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close