[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
  • BREAKING-NEWS இன்று இரவு 8 மணிக்கு குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS பெரியார் மண்ணான திராவிட பூமியில் எந்த கட்சியை விதைத்தாலும் மலராது - கி.வீரமணி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.25 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.37 காசுகளாகவும் விலை நிர்ணயம்

மேற்குவங்கத்தில் பாஜக பெண் வேட்பாளர் மீது தாக்குதல்

bengal-bjp-s-bharati-ghosh-breaks-down-after-being-attacked-by-trinamool-workers

மேற்குவங்க மாநிலத்தில் பாஜக பெண் வேட்பாளரான பாரதி கோஷ் மீது இரண்டு முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

கடால் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான பாரதி கோஷ். இவர் கேஷ்பூரில் உள்ள வாக்குச் சாவடிக்கு சென்றுள்ளார். அப்போது ஏஜெண்ட் ஒருவரை பூத்திற்கு அழைத்துச் சென்றதாக தெரிகின்றது. அதனையடுத்து, அங்கிருந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண்கள் பாரதி கோஷ் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 

இதனையடுத்து, கேஷ்பூரில் உள்ள மற்றொரு பூத்திற்கு பாரதி கோஷ் சென்று கொண்டிருந்த போது அவரது வாகனத்தின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், கையெறி குண்டுகளும் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், அவரது பாதுகாப்பு காவலர் ஒருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து மேற்கு மிட்னாபூர் மாவட்ட ஆட்சியரிடம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் கேட்டுள்ளார். விளக்கம் வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

                 

நாடு முழுவதும் 59 தொகுதிகளில் 6வது கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முறை மேற்குவங்கத்தில் பாஜகவுக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close