[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

அதிமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று வெளியீடு?

admk-alliance-constituency-will-announce-today

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிப் பட்டியல் இன்று வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தல்களை எதிர்கொள்ள அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமகவுக்கு 7 நாடாளுமன்ற தொகுதிகளும், பாரதிய ஜனதா கட்சிக்கு 5 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல், புதிய தமிழகம் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, என்.ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்குவது குறித்த பேச்சுவார்த்தை, அனைத்து கட்சிகளுடனும் சுமூகமாக முடிவுற்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சியுடன் மட்டும் பேச்சுவார்த்தை  நீடித்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது பாரதிய ஜனதாவுடனும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளதால், எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொகுதிப் பட்டியலை வெளியிட உள்ளதாகவும், இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close