[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

“பிரியங்கா மிகவும் அழகானவர்”- பாஜக அமைச்சர் பேச்சு

bihar-priyanka-gandhi-has-a-beautiful-face-but-no-political-achievement-says-bjp-leader

பிரியங்கா காந்தி அழகானவர், ஆனால் அரசியலில் இதுவரை எந்தச் சாதனையும் செய்யவில்லை என்று பாஜக அமைச்சர் ஒருவர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா, உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நேரங்களில் அவ்வவ்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். சில அரசியல் பணிகளையும் செய்து வந்தார். இருப்பினும், அவர் கட்சியில் எந்தப் பொறுப்பும் வகிக்கவில்லை. ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், கடந்த ஓராண்டாக அரசியலில் இது ஒதுங்கி இருந்தார்.

          

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேச கிழக்குப் பகுதி பொதுச் செயலாளராக அண்மையில் பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். பிரியங்கா காந்திக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ராகுல் தலைமையின் தோல்வியே பிரியங்காவின் வருகைக்கு காரணம் என்று பாஜக விமர்சித்தது. அதேபோல், குடும்ப அரசியலை குறிப்பிட்டும் கடுமையாக சாடியது.

            

இந்நிலையில், பிரியங்காவின் நியமனம் குறித்து பீகார் பாஜக அமைச்சர் வினோத் நாராயணன் பேசுகையில், ‘பிரியங்கா காந்தி மிகவும் அழகானவர். அரசியலில் எந்த அனுபவமும் அவருக்கு கிடையாது. நான் பார்த்தவரை அவரிடம் எந்த அரசியல் திறமையும் இருக்கவில்லை. அவரது அழகு வாக்குகளை பெற்றுத் தராது’ என்று கூறினார். பாஜக அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வினோத் நாராயனின் பேச்சுக்கு தேசிய பெண்கள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close