[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
  • BREAKING-NEWS ரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
  • BREAKING-NEWS 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

ஓபிஎஸ் என்னை சந்தித்தார்: டிடிவி தினகரன் பேட்டி

ops-met-me-last-year-ttv-dinakaran

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் என்னை சந்தித்தது உண்மைதான் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் அளித்தப் பேட்டியில், டிடிவி தினகரனும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கடந்த வருடம் சந்தித்து பேசினார்கள். 2017 ஜூலை 12ஆம் தேதி இந்த சந்திப்பு நடந்தது. கோட்டூர்புரம் இல்லத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இதில் ஆட்சிக் கவிழ்ப்பு குறித்து பேசப்பட்டது. இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. உரிய நேரத்தில் அதை வெளியிடுவேன். கடந்த வாரம் தினகரனை சந்திக்க ஓ.பி.எஸ் நேரம் கேட்டார். எடப்பாடி ஆட்சியை கலைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். ஆனால் இந்த சந்திப்பு நடக்கவில்லை’ என்று கூறியிருந்தார். இந்த பேட்டி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Read Also -> அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்த தினகரன் முயற்சி: கே.பி.முனுசாமி 

இந்நிலையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ‘கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி என்னை சந்திக்க நேரம் கேட்டிருந்தார் ஓ.பன்னீர்செல்வம். அப்போது நாங்கள் சந்தித்தது தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டவர்களுக்கு தெரியும். நான் தவறு பண்ணிவிட்டேன் என்றும் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்தது தவறுதான் என்றும் சொல்லியிருந்தார். கடந்த வாரம் கூட என்னை சந்திக்க அவர் விருப்பம் தெரிவித்ததாக தகவல் வந்தது. அதில் என்னுடன் சேர்ந்து எடப்பாடி பழனிச்சாமியை பதவியை விட்டு நீக்க விருப்பம் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

Read Also -> ‘தினகரன் தான் தூதுவிட்டார்’ - அமைச்சர் தங்கமணி பதிலடி 

ஓபிஎஸ், ஈபிஎஸ் உடன் இணையும் எண்ணம் எங்களுக்கு இல்லை. அவர்களுடன் இணைவது தற்கொலைக்கு சமம். எங்கள் குடும்பத்தை பற்றி பேசிக்கொண்டே என்னை சந்திக்க நேரம் கேட்டிருந்தார் அவர். இந்த சந்திப்பு பற்றி இப்போது சொல்வதில் எந்த உள்நோக்கமும் இல்லை. 
கட்சியை உடைத்ததும் தர்மயுத்தம் நடத்தியதும் ஓபிஎஸ் முதலமைச்சர் ஆவதற்காகத்தான். அவர் எங்கள் ஸ்லீப்பர் செல் இல்லை. ஓபிஎஸ் -எடப்பாடி பழனிசாமி இடையே ஒற்றுமை இல்லை. தங்களுக்கு பின்னே சதித்திட்டம் வைத்துள்ளனர்’ என்று தெரிவித்தார்.
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close