[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS அஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.
  • BREAKING-NEWS நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்
  • BREAKING-NEWS மதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு
  • BREAKING-NEWS ஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்? - தம்பிதுரை எம்.பி.

”தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வியூகம் வகுக்கிறது பாஜக” : முரளிதர்ராவ்

bjp-will-use-current-situation-of-tamilnadu-says-muralidhar-rao

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது தமிழகத்தில் சாதகமான அரசியல் சூழல் உள்ளதாகவும், அதை முழுமையாக பாஜக  பயன்படுத்திக்கொள்ள உள்ளதாகவும் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும்,  பாஜக மேலிட பொறுப்பாளருமான முரளிதரராவ் தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்தவித திட்டங்களுக்கும் மத்திய அரசு மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்கத்தான் செய்யும் என்றும், திட்டங்களை செயல்படுத்தும் போது போராட்டம் நடைபெறும் இயல்பு என்பதால் விவசாயிகளுக்கும்,  பொதுமக்களுக்கும் புரிய வைத்து அவர்களை சமாதானப்படுத்தி திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றார்.

கடந்த 48 மாதங்களில் எய்ம்ஸ்,  ராணுவ தளவாடம் என இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் தமிழகத்திற்கு பாஜக கொண்டு வந்துள்ளதாகவும், இது குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக கூறியவர், இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்னையில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். வருகிற நாடாளுமன்ற தேர்தல் உட்பட தமிழக தேர்தலுக்காக பாஜக தீவிரமாக வியூகங்களை வகுத்து தயாராகி வருவதாகவும், வருகிற 9-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்பதாகவும், அடுத்த 10 மாதத்தில் தமிழகத்தில் பாஜக கையாள வேண்டிய உத்திகள் குறித்து கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறியவர், தேர்தல் கூட்டணிக்கு பாஜக திறந்த மனதுடன் உள்ளதாகவும், தொழில்துறையினர் பாதிக்காத வகையில் ஜி.எஸ்.டி கவுன்சில் தேவையான நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.

 தமிழகத்தில் குறிப்பாக கோவையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருவதாகவும், தமிழக மக்களிடையே மத்திய அரசின் புகழ் அதிகமாக உள்ளதாகவும், ஜந்தர் மந்தரில் நாளொன்றில் 15 அமைப்புகள் போராட்டம் செய்வதால், அதனை மோடி அரசு மீது மக்களின் மதிப்பாக எடுத்துக்கொள்ள கூடாது என்றார். மோடி அரசு தமிழகத்தின் அடையாளத்தை, புகழை, வளர்ச்சியை உயர்த்த செயல்பட்டு வருவதாகவும், தமிழகத்தின் பெருமை இந்தியாவின் பெருமைக்கு நிகரானது என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close