சசிகலாவுக்கு பரப்பன அக்ரஹாரா சிறை வழங்கிய 5 நாள் பரோல், இன்றுடன் முடிவடைகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த பிப்ரவரி 15-ம் தேதி முதல் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்த சசிகலா, தனது கணவர் நடராஜனின் உடல் நிலையை காரணம் காட்டி பரோல் கேட்டிருந்தார். அவருக்கு சிறைத்துறை, கடந்த 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை பரோல் வழங்கியிருந்தது. இதையடுத்து கடந்த 6-ம் தேதி மாலையில் சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா, சென்னை தியாகராய நகரில் உள்ள உறவினர் இல்லத்தில் தங்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவரை சந்தித்து வருகிறார். அவருக்கு சிறைத்துறை வழங்கிய பரோல் அவகாசம் இன்றோடு முடிவடைகிறது.
சசிகலா 12-ம் தேதி மாலை 6 மணிக்குள் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்க வேண்டுமென ஏற்கெனவே சிறைத்துறை தனது பரோல் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
தெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை
இன்று உலக தாய்மொழி தினம் ! இந்தியாவில் மொழிகளின் நிலை என்ன ?
"தூக்குத் தண்டனை மட்டும் வேண்டாம், ஆயுள் முழுக்க ஜெயில்லயே இருக்கட்டும்" தஷ்வந்தின் தந்தை
200 அடி குழிக்குள் விழுந்த 6 வயது குழந்தை: மீட்பு பணி தீவிரம்
“கொலை மிரட்டல் விடுக்கிறார்”- பிக்பாஸ் தாடி பாலாஜி மீது புகார்