[X] Close
JUST IN
 • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
 • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
 • BREAKING-NEWS 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உட்பட 7 வழக்குகளின் விசாரணை 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS பத்மாவதி திரைப்படத்தில் சில காட்சிகளை நீக்கக் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
 • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரம் டிச.1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 11 பேர் விடுவிப்பு
 • BREAKING-NEWS புதிய வரைவு பாடத்திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறையின் http://www.tnscert.org தளத்தில் வெளியீடு
 • BREAKING-NEWS தாஜ்மஹாலை பராமரிப்பதில் ஏன் உத்தரபிரதேச அரசு தொய்வுடன் செயல்படுகிறது- உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS மதுரை: முனி கோயில் நான்கு வழிச்சாலையில் 5000 விவசாயிகள் சாலை மறியல்
 • BREAKING-NEWS முட்டை விலை உயர்வை காரணம்காட்டி சத்துணவில் முட்டையை நிறுத்த முயற்சிப்பது வேதனை தருகிறது- ஸ்டாலின்
 • BREAKING-NEWS தமிழகத்தில் பாஜகவால் கால் அல்ல, கையை கூட ஊன்ற முடியாது: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கட்சித்தொடங்க தொண்டர்களிடம் பணம் கேட்ட ஒரே நபர் கமல்ஹாசன்- அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி
அரசியல் 10 Sep, 2017 06:03 PM

நடவடிக்கையில்லை என்றால் மக்கள் மன்றம், நீதிமன்றத்தை நாடுவோம்: ஸ்டாலின் பேட்டி

if-people-do-not-have-a-forum-we-will-seek-court-stalin-interview

எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மை நிரூபிப்பது தொடர்பாக ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் மன்றத்தையும், நீதிமன்றத்தையும் நாடுவோம் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அதிமுக எம்எல்ஏக்கள் 19 பேர் கடிதம் கொடு்த்திருந்தனர். அதன்பிறகு திமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் தலைமையில், ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்த திமுக எம்எல்ஏக்கள், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, முதலமைச்சர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டுமென வலியுறுத்தியிருந்தனர். 

இதனிடையே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. ஜக்கையன் திடீரென எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தாவினார். அதேநாளில், கருணாஸ், ரத்தின சபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் முதல்வருக்கான ஆதாரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. 

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்,   இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இன்று மீண்டும் ஆளுநரைச் சந்தித்தனர். 

இந்த சந்திப்பின் போது, எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி கடிதம் அளித்தனர்.

ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “சமீபத்தில் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பலத்தை கூட்டுவதற்கு எடப்பாடி தரப்பினர் கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே கலந்து கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. 

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் வெளிப்படையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் மொத்தம் 98 பேர் உள்ளனர். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கான எதிர்ப்பு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சேர்ந்து 119 ஆக உள்ளது. அப்படியென்றால் எடப்பாடிக்கு ஆதரவாக 114 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். 

இதனால், நம்பிக்கையை இழந்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும். ஆளுநரை சந்தித்து வலியுறுத்துவது இதுவே கடைசி முறையாக இருக்கும். பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்குமாறு, ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம். ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தையும், மக்கள் மன்றத்தையும் நாடுவோம்” என்றார். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close