[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்
  • BREAKING-NEWS டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது

அதிமுகவை யார்தான் வழிநடத்துகிறார்கள்?

who-is-actually-leading-admk

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட நிர்வாகிகளே கட்சியை வழிநடத்தி வருவதாக அதிமுக அம்மா அணியினர் தெரிவித்துள்ளனர்.

கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கட்சியினர் அனைவரும் ஒன்று கூடி ஜெயலலிதாவின் லட்சியங்களை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் இடத்தில் வேறு யாரையும் வைத்து பார்க்க அதிமுகவின் தொண்டர்கள் விரும்பமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தற்காலிகப் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை எதிர்த்து பலரும் தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், ஜெயலலிதாவினால் நியமனம் செய்யப்பட்ட தலைமைக்கழக நிர்வாகிகள் கட்சியை வழிநடத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவால் 2011 ஆம் ஆண்டு டிசம்பரில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் சேர்த்து அவரைத் துணைப் பொதுச்செயலாளராக நியமித்தது கட்சி விதிகளின் படி சட்டவிரோதம் என்றும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக தினகரனை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும், பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது தேர்தல் ஆணையத்தின் முன்பு விசாரணையில் இருந்து வருவதும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close