[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுப்பதே மிகப் பெரிய சவால்: நசிம் ஜைதி பிரத்யேக பேட்டி

nasim-zaidi-exclusive-interview-to-puthiyathalaimurai

தமிழகம், புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதைத் தடுப்பதே தேர்தல் ஆணையத்தின் முன்னுள்ள மிகப் பெரிய சவால் என தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி தெரிவித்துள்ளார். டெல்லியில் புதிய தலைமுறை செய்தியாளர் க‌ணபதிக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில் இதனை அவர் தெரிவித்தார்.

கேள்வி: தேர்தலில் பண பலம் தவறாக பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. பல கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கூறப்படுகிறது. அதுபோன்ற முறைகேடுகளை நீங்கள் எவ்வாறு தடுக்கப் போகிறீர்கள்?

பதில்: தேர்தல் ஆணையம் முன்னுள்ள சவால்களை நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். குறிப்பாக, தமிழகத்தில் மது, பணம், பரிசுப் பொருட்கள் என பல வழிகளில், பணம் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன.

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவின் சில பகுதி‌ளில் பண பலத்தைக் கட்டுப்படுத்துவதே எங்கள் முன்னுள்ள மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அதேநேரம், அதிக அளவில் வாக்குகள் பதிவாகும் மாநிலங்களாக அந்த 3 மாநிலங்களும் அறியப்படுகின்றன.

தேர்தலில் வாக்காளர்களை பங்கேற்கச் செய்வதும் எங்களுக்குள்ள சவால் என்றாலும், இந்த 3 மாநிலங்களிலும் வாக்குப்பதிவு சதவிகிதத்தை இன்னும் அதிகபட்ச அளவுக்கு உயர்த்துவதே எங்கள் இலக்காக இருக்கும்.

தேர்தலில் பண பலத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அதற்காக, எங்களது செயல் திட்டத்தில் பிரத்யேக வியூகங்கள் இருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close