[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

ஜம்மு-காஷ்மீர்: லடாக்கில் பனிச் சரிவில் சிக்கிய ராணுவ வீரர்கள்:மீட்கும் பணி தீவிரம்

jammu-and-kashmir-ten-soldiers-trapped-after-avalanche-hits-military-post-at-siachen

ஜம்மு காஷ்மீரில் நேரிட்ட பனிச்சரிவில் ராணுவத்தினர் பத்து பேர் சிக்கிக்கொண்டனர்.

கடல்மட்டத்திலிருந்து சுமார் 19ஆயிரம் உடி உயரத்‌தில் அமைந்துள்ள சியாச்சின் மலைப்பகுதியில் அதிகாலை பனிச்சரிவு ஏற்பட்டது. ‌இதில் மூத்த அதிகாரி ஒருவர் உட்பட பத்து பேர் சிக்கிக்கொண்டதாக தகவல் வெளியாகி‌யுள்ளது. அவர்களை மீட்கும் பணியில் ராணுவமும், விமானப்படையும் ஈடுபட்டுள்ளது.

பனிச்சரிவில் சிக்கியுள்ளவர்களில் மெட்ராஸ் ரெஜிமன்டைச் சேர்ந்தவரும் அடங்குவார் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இது குறித்து புதிய தலைமுறைத் தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த பாதுகாப்பு துறை செய்தியாளர் ஆதில் லதீஃப், சியாச்சின் மலைப்பகுதியில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் 10 ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர்.அவர்களை மீட்கும் பணி தற்போது நடந்து வருகிறது என்றும் இதுவரை யாரும் மீட்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close