[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்
  • BREAKING-NEWS ஏலம் மூலமாக உள்ளாட்சிப் பதவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தப் பதவி செல்லாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ
  • BREAKING-NEWS டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பேருந்துகளுக்கு தீ வைப்பு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்

தகாத உறவில் பிறந்த பச்சிளம் பெண் குழந்தை - கழுத்து நெறித்து கொன்ற கொடூரம்

a-baby-born-an-immoral-sex-in-kerala-state

தகாத உறவில் பிறந்த பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கழுத்தை நெறித்து கொன்று புதைக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள வாத்திக்குடி என்னும் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண், கட்டப்பனை கல்லூரி ஒன்றில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த மாதம் தனது வீட்டு குளியலறையில் குளிக்க சென்றவர் நீண்ட நேரமாக கதவு திறக்காததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதவை நெடுநேரம் தட்டி உள்ளனர். அதன்பின் கதவு திறக்கப்பட்டது.

அப்போது குளிக்க சென்ற தங்களின் மகள், குளியலறை உள்ளேயே அழகிய பெண்குழந்தை ஒன்றை பிரசவித்திருப்பதை கண்டனர். அதைக் கண்டு அதிர்ந்து போயினர். பிரசவ சத்தம் கூட வராமல் ஒரு குழந்தை பிரசவிக்க அவரால் எப்படி முடிந்தது? கல்லுரிக்கு படிக்க சென்று வந்த மணம் ஆகாத அந்தப் பெண் குளியலறைக்குள் ஒரு குழந்தைக்கு தாயாக மாறியது அவர்களின் பெற்றோரை எந்தளவுக்கு உலுக்கி இருக்கும்? ஆகவே அவர்கள் இதைக் கண்டதும் கண்ணீர் விட்டு கதறி உள்ளனர். கல்லூரியில் படிக்கும் மகள் கர்ப்பமானது கூட நிறைமாதம் வரை தெரியவில்லையே என வயிற்றிலும் வாயிலும் அடித்து அழுதனர்.

இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் குடும்ப மானமே போய்விடும் என்று எண்ணிய பெற்றோர் மகளை வெளியில் விடாமல் பார்த்துக் கொண்டனர். இப்படியே நாட்கள் 27 நகர்ந்துள்ளது.

இந்நிலையில், அந்தக் கல்லூரி மாணவி வீட்டுப் பக்கத்தில் இருந்த அக்கம் பக்கத்தினர், மாணவி குழந்தை ஒருன்றை பெற்றுள்ளதாகவும், அக்குழந்தை இறந்ததால் அது புதைக்கப்பட்டு விட்டதாகவும் போலீஸாருக்கு ரகசிய தகவல் தந்ததாக தெரிகிறது. இதையடுத்து, முருகாசேரி போலீஸார் வாத்திக்குடி கிராமத்திற்கு விரைந்துள்ளனர். அந்தக் கல்லூரி மாணவி மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் திருமணமாகாத தனது மகள் குளியலறையில் குழந்தை பெற்றது முதல் குழந்தை உடல் நலக்குறைவால் இறந்துவிட்டது வரை கூறியுள்ளனர்.

சந்தேகமடைந்த போலீஸார், “நெகிழி” பையில் சுற்றி புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் உடலை தோண்டி எடுத்து, கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வு சோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்தப்பட்ட சேதனையில் குழந்தை கழுத்து நெறிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, தகாத உறவின் மூலம் பிறந்து 27 நாட்களே ஆன குழந்தையை கொலை செய்ததாக திருமணம் ஆகாத கல்லூரி மாணவியின் தாயார் மீது, கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close