[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது டெல்லி உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை, இந்தியா கேட் பகுதிகளில் காற்று மாசு அதிகரிப்பு; வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS லாக்-அப் என்கவுன்டர் விவகாரம்: எஸ்.ஐ. காளிதாஸுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!
  • BREAKING-NEWS சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட உதயநிதி ஸ்டாலின் சார்பில் விருப்பமனு
  • BREAKING-NEWS ரஃபேல் தீர்ப்பு எதிர்க்கட்சியினருக்கு சரியான பதிலடி - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS மனைவி நளினி மற்றும் உறவினர்களைப் பார்க்க முருகனுக்கு அனுமதி வழங்குக - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

‘காக்கிச்சட்டையில் சேவை செய்தது என் பாக்கியம்’ - நெகிழ்ச்சி பதிவிட்ட அண்ணாமலை

resignation-of-former-bengaluru-dcp-annamalai-accepted-by-government

தன்னுடைய ராஜினாமாவை அரசு ஏற்றுக்கொண்டு விட்டதாக ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

ஐபிஎஸ் அதிகாரிகளில் கம்பீரமாகவும், நேர்மையுடனும் செயல்படுபவர் என்ற பெருமை கொண்டவர் அண்ணாமலை. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2011ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி ஆனார். படிபடியாக பதவி உயர்வு பெற்று கடந்த ஆண்டு தெற்கு பெங்களூரு துணை ஆணையராக பதவி வகித்தார். திடீரென தனது பதிவியை ராஜினாமா செய்வதாக செப்டம்பர் மாதம் அறிவித்தார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த வருடம் நான் கைலாஷ் மானசரோவர் சென்றிருந்தேன். அங்கு வாழ்க்கையின் முக்கியவத்துவம் குறித்து கண் திறந்துகொண்டது. அத்துடன் அதிகாரி முதுகார் ஷெட்டியின் மரணம் என் வாழ்வை என்னவென்று உணர்த்தியுள்ளது. இதனால் காக்கிச்சட்டை என்ற நல்ல விசயம் அனைத்திற்கும் விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. தேர்தல் நேரத்தில் பதவி விலகினால் அரசிற்கு அது சிரமத்தை ஏற்படுத்தும் எனத் தேர்தல் முடியும் வரை பொறுத்திருந்து ராஜினாமா செய்துள்ளேன். கடந்த ஆறு மாதங்களாக நன்கு யோசித்துதான் இந்த முடிவிற்கு வந்துள்ளேன். இனி நானும் எனது சிறந்த தோழியான மனைவியும் வாழ்வை இனிதாக கடப்போம்” என்று தெரிவித்தார்.

ஏதேனும் மிரட்டல்களால் அவர் ராஜினாமா செய்கிறாரா? அல்லது அரசியலில் கால்பதிக்கப்போகிறாரா? என பலரும் பல்வேறு யூகங்களை தெரிவித்தனர். அது குறித்து பதில் அளித்த அண்ணாமலை, நான் ஒரு சிறிய மனிதன். நான் எனது வாழ்வில் இழந்ததை எல்லாம் மீண்டும் பெற்று மகிழ்ச்சி அடையப்போகிறேன். எனது மகனுக்கு ஒரு நல்ல தந்தையாக இருக்கப்போகிறேன் என தெரிவித்திருந்தார். இருப்பினும், அரசு தரப்பில் அவரது ராஜினாமா ஏற்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் தன்னுடைய ராஜினாமாவை அரசு ஏற்றுக்கொண்டு விட்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ''எட்டு வருட காவல் பணியைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் 28ம் தேதி என்னுடைய ராஜினாமா கடிதத்தை அனுப்பினேன். கர்நாடக அரசால் நேற்று அதிகாரப்பூர்வமாக விலக்கப்பட்டேன். காக்கி உடையை அணிந்துகொண்டு நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை செய்தது என் பாக்கியம்'' என தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close