[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தோனேசியாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம். 7.4 ரிக்டர் அளவில் தாக்கிய நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
  • BREAKING-NEWS கும்பகோணத்தில்‌ பாதாளச்சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தால் ஆண்டுக்கு 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த கலெக்டர்.. குவியும் பாராட்டு..!

collector-sending-his-child-to-govt-school

சத்தீஸ்கரில் மாவட்ட ஆட்சியர் ஒருவர் தனது குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இப்போதெல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டாவது தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைத்துவிட வேண்டும் என பல பெற்றோர்களும் நினைக்கின்றனர். அதற்காக பொருளாதார வகையிலும் மிகவும் சிரமங்களை சந்திக்கின்றனர். தனியார் பள்ளிகளில் படித்தால்தான் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம்தான் அவர்கள் தனியார் பள்ளிகளை நாட அதிகமான காரணமாக உள்ளது. இந்நிலையில் சத்தீஸ்கரில் மாவட்ட ஆட்சியர் ஒருவர் தனது குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்த்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர் அவனிஷ் ஷரன். தற்போது சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தம் மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது குழந்தையை அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் சேர்த்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் ஆட்சியர் அவனிஷ் ஷரனுக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் அவனிஷ் ஷரன் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்கிறார். இதுபோன்று மற்ற மாவட்ட ஆட்சியர்கள், அரசியல்வாதிகள் என பலரும் அரசின் திட்டங்களை பயன்படுத்தத் தொடங்கினால் அதன் தரம் உயரும் என பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close