[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச
  • BREAKING-NEWS டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்
  • BREAKING-NEWS கரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனம் 435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு
  • BREAKING-NEWS உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் எஸ்.ஏ.பாப்டே

மகாராஷ்ட்ரா தேர்தல்: தாதா ’சோட்டா ராஜன்’ தம்பியின் சீட் திடீர் பறிப்பு!

chhota-rajan-s-brother-replaced-as-maharashtra-assembly-poll-candidate

மகாராஷ்ட்ர தேர்தலில், பிரபல தாதா, ‘சோட்டா ராஜன்’ தம்பிக்கு வழங்கப்பட்ட தொகுதியில் வேறு வேட்பாளர்  போட்டியிடுவார் என்று இந்திய குடியரசு கட்சி அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக- சிவசேனா தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசுக் கட்சியும் இடம்பெற்றுள்ளது. அந்தக் கட்சிக்கு 6 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

இதில் ஒரு தொகுதியை, பிரபல தாதா, ‘சோட்டா ராஜன்’ தம்பி தீபக் நிகல்ஜி-க்கு இந்திய குடியரசுக் கட்சி ஒதுக்கியது. அதன்படி, சதாரா மாவட்டத்தில் உள்ள பல்தான் (Phaltan) தொகுதியில் தீபக் நிகல்ஜி போட்டியிடுவார் என்று அறிவிக் கப்பட்டது. இவர் இதற்கு முன்னர் மும்பையின் செம்பூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 

இந்நிலையில் பல்தான் தொகுதியில் தீபக் நிகல்ஜிக்கு பதிலாக திகம்பர் அகவானே போட்டியிடுவார் என்று குடியரசு கட்சியின் மூத்த தலைவரும் மகாராஷ்ட்ரா அமைச்சருமான அவினாஷ் மகடேகர் தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close