தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் மனைவிக்கு வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா. இவர், கடந்த மக்களவைத் தேர்தலின் போது, தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையாளர் சுசில் சந்திரா ஆகியோரின் கருத்துக்களில் இருந்து வேறுபட்டார். ’தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பான முடிவுகளில் தன்னுடைய கருத்துகள் ஏற்கப்படவில்லை’ என பரபரப்பு புகார் கூறியிருந்தார். தேர்தல் ஆணையம் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். இது அப்போது பரபரப்பானது. இந்நிலையில், அசோக் லவாசாவின் மனைவி நோவக் (Novel) லவசாவுக்கு வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நோவல், பல நிறுவனங்களில் இயக்குனராக பணியாற்றியுள்ளார். அன்னிய செலாவணி தொடர்பாக அவர் தாக்கல் செய்த வருமான வரி கணக்கில், முரண்பாடு இருப்பதால், அது தொடர்பாக விளக்கமளிக்க வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுபற்றி நோவல் கூறும்போது, தனது ஓய்வூதியம் மற்றும் இதர வருமானங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வருமான வரித்துறைக்கு தெரிவித்துவிட்டேன். ஆகஸ்ட் 5 ஆம் தேதியில் இருந்து பெறப்பட்ட வருமான வரித்துறை நோட்டீஸ்களுக்கு பதில் அளித்துவிட்டேன். தற்போது நடக்கும் விசாரணைக்கும் ஒத்துழைப்பு அளிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக வாக்காளர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு
பொறியியல் படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் டெட் எழுதி ஆசிரியர் ஆகலாம் - தமிழக அரசு
கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படுமா..? நிர்மலா சீதாராமன் விளக்கம்..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!