[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு 

maharashtra-haryana-poll-schedule-announced-model-code-of-conduct-comes-into-effect

மகராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கும் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் நவம்பர் 9ம் தேதியும் ஹரியானாவில் நவம்பர் 2ம் தேதி அரசுகளின் ஆட்சிக்காலம் முடிவடைகின்றன. இந்நிலையில் அம்மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் அறிவித்தார். மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும், ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மனுத்தாக்கல் வரும் 27ஆம் தேதி தொடங்குகிறது. 

வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 4ஆம் தேதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறும். இதைத்தொடர்ந்து மனுவை திரும்பப் பெற அக்டோபர் 7ஆம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டரா, ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 21ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இரு மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகளும் அக்டோபர் 24ம் தேதி எண்ணப்படுகின்றன. தேர்தல் அறிவிக்கப்பட்டதையொட்டி, நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

மொத்தம் 288 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ள மகாராஷ்டிராவில் எட்டு கோடியே 94 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். இதேபோல் சட்டமன்றத் 90 தொகுதிகளைக் கொண்டுள்ள ஹரியானாவில் ஒரு கோடியே 80 லட்ச பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close