[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்க கர்நாடக அரசும் முடிவு

karnataka-plans-to-buy-land-in-jammu-kashmir-for-tourism

மகாராஷ்ட்ர மாநிலத்தை அடுத்து, கர்நாடக பாஜக அரசும் ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்க முடிவு செய்துள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய பாஜக அரசு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி அதிரடியாக ரத்து செய்தது. இதையடுத்து வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நிலம் வாங்குவதற்கு இருந்த தடை நீங்கியது.  இந்நிலையில், அங்கு நிலம் வாங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

இதுபற்றி கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர் ரவி கூறும்போது, ’இதுதொடர்பான முன்மொழிவை அமைச்சரவையில் வைக்க இருக்கிறோம். அதில் அனுமதி கிடைத்தபிறகு, மத்திய அரசுக்கும் ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநருக்கு கடிதம் எழுத இருக்கிறோம்’ என்றார். அங்கு சுற்றுலா விடுதிகளை கட்டுவதற்கு கர்நாடக சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. 

ஏற்கனவே, மகாராஷ்டிர பாஜக அரசு ஜம்மு-காஷ்மீரில் நிலம் வாங்க முடிவு செய்துள்ளது. அங்கு 2 சுற்றுலா விடுதிகள் கட்டுவதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close