[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

ப.சிதம்பரம், கார்த்தி மீது நிலுவையில் உள்ள வழக்குகள் என்னென்ன?

a-few-more-cases-are-pending-against-p-chidambaram-and-his-family

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இன்னும் சில வழக்குகளும் நிலுவையில் உள்ளன

ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கை எதிர்கொண்டு வருகின்றனர். 2006ஆம் ஆண்டு சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக பதவி வகித்த போது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்தது. இதற்காக அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்தின் தலையீடு இருந்ததாகவும் கூறப்பட்டது. 

அதாவது வெளிநாட்டு நிறுவனம் 3 ஆயிரத்து ‌500 கோடி ரூபாய் முதலீடு செய்ய, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழுதான் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் மேக்சிஸ் நிறுவனத்துக்கு நிதியமைச்சரின் கட்டுப்பாட்டில் இருந்த அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதாக கூறப்பட்டது. 

இதுதொடர்பாக ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் பண மோசடி நடைபெற்று இருப்பதாகக்கூறி இருவர் மீதும் அமலாக்கத்துறை தனி வழக்குப்பதிந்தது. ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக இரு புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியே ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளன. இந்த வழக்கில் இருவரையும் கைது செய்ய ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை விசாரணை நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

இதற்கிடையே ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஏர்பஸ் விமானங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக ப.சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதே போல் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மீது சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கும், சிதம்பரம் மற்றும் காரத்தி சிதம்பரம் தம்பதி மீது வெளிநாட்டு சொத்து விவரங்களை தெரிவிக்காத வழக்கும் நிலுவையில் இருக்கின்றன. இவை தவிர ப.சிதம்பரம் மீது வேறு சில வழக்குகளும் நிலுவையில் உள்ளன

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close