மும்பை விமான நிலையத்திற்கு வேலை வேண்டி ஒருவர் தொலைபேசி செய்ததை அதிகாரிகள் தவறுதலாக வெடிகுண்டு இருப்பதாக புரிந்து கொண்ட விஷயம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை விமான நிலையத்திற்கு கடந்த 19ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் ஒரு இளைஞர் தொலைபேசி செய்துள்ளார். அவர் ‘பாம்பே ஹை’ இது ‘பாம்பேவா?’எனக் கேட்டத்தை விமான நிலைய அதிகாரி தவறுதலாக ‘பாம் ஹை’என்று அதாவது ‘வெடிகுண்டு இருக்கிறது’ எனப் புரிந்துகொண்டுள்ளார். இதனையடுத்து அவர் உடனே விமான நிலைய அதிகாரிகளை எச்சரித்துள்ளார். விமான நிலையத்தில் தீவிர சோதனையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அத்துடன் தீவிர விசாரணையும் நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் இந்த விமான நிலையத்தில் வெடிகுண்டு இல்லை என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த இளைஞரை விமான நிலைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக அந்த இளைஞர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தளத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “நான் ஒரு ஹோட்டல் மேலாண்மை பட்டதாரி. இதற்கு முன்பு நான் நிறையே ஹோட்டல்களில் வேலை பார்த்து வந்தேன். எனினும் தற்போது எனக்கு வேலையில்லாததால் நான் வேலை தேடி வந்தேன்.
அப்போது மும்பை விமான நிலையத்தில் ஒரு வேலை இருப்பது எனக்கு தெரியவந்தது. ஆகவே இதுபற்றி விசாரிக்க நான் தொலைபேசியில் அழைத்தேன். ஆனால் என்னுடைய அழைப்பு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. இதற்காக நான் அவர்களிடம் மன்னிப்பும் கேட்டேன். இதை தவிர எனக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews
குடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
ஊராட்சித் தலைவர் பதவி ஏலம்? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
நித்தியானந்தா எங்கு இருக்கிறார்? - அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!
பெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்?: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்!