[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

“நீதி என்ற வார்த்தைக்கு ஏற்ப சரியான தீர்ப்பு”- ப.சிதம்பரம்

icj-delivers-justice-in-the-true-sense-of-that-word-p-chidambaram

குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில், நீதி என்ற வார்த்தைக்கு ஏற்ப சரியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி, உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு 2017-ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, இந்தியா சார்பில் நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதை விசாரித்த 16 நீதிபதிகள் அமர்வு, குல்பூஷண் ஜாதவின் தூக்குத் தண்டனையை தடை செய்ததோடு, வழக்கை திரும்பவும் நடத்துமாறு பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது.

வியன்னா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக தெரிவித்த நீதிபதிகள், குல்பூஷண் ஜாதவுக்கு ஆதரவாக வழக்கறிஞரை நியமிக்கவும் அனுமதி அளித்தது. இந்த தீர்ப்பில் இந்தியாவுக்கு சாதகமாக 15 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கிய நிலையில், ஒருவர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார்.

 

 

இந்நிலையில் குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில், நீதி என்ற வார்த்தைக்கு ஏற்ப சரியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம்,  “ சர்வதேச நீதிமன்றம் நீதி என்ற வார்த்தைக்கு ஏற்ப சரியான தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பில் அனைத்து நெறிமுறைகளும் கடைபிடிக்கப்பட்டு மனித உரிமை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இவ்விவகாரத்தில் ஒருமித்த கருத்துடன் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close