[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

“கட்சிக்கு உண்மையாக உழைக்காதவர்களை கண்டுபிடிப்போம்” - பிரியங்கா ஆவேசம்

will-find-out-who-did-not-work-for-us-priyanka-to-congress-workers

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் பலர் உண்மையாக உழைக்கவில்லை என்றும், அவர்களைக் கண்டுபிடிப்போம் எனவும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தை கூட அக்கட்சியால் பெற முடியவில்லை. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்வியடைந்தார். பிரியங்கா காந்தியை காங்கிரஸின் பொதுச்செயலாளராக மட்டுமல்லாமல், உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு மாநில பொறுப்பாளராக நியமித்தும் இந்தத் தோல்வி நடந்தது. இதனால் காங்கிரஸ் தலைமை கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

இந்நிலையில் இன்று ரேபரேல்லி தொகுதியில் சோனியா காந்தியை வெற்றி பெறச் செய்ததற்காக நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பிரியங்கா காந்தி, “நான் இங்கு எதையும் பேச விரும்பவில்லை. ஆனால் சில உண்மைகளைக் கூற வேண்டிய நிலையில் உள்ளேன். ரேபரேல்லி தொகுதியில் சோனியாவின் செல்வாக்கிலும், மக்கள் ஆதரவிலும் மட்டுமே  வென்றுள்ளோம். மற்றபடி மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் பலரும் சரியாக வேலை செய்யவில்லை. அவர்கள் குறிப்பிட்ட மதத்தினருக்கு ஆதரவாக இருந்துவிட்டனர். நாங்கள் அவர்களை உறுதியாக கண்டுபிடிப்போம்” என்று ஆவேசமாக கூறினார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close