[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்கிம்மர் கருவி மூலம் சென்னை ஏடிஎம்களில் திருட்டு - பல்கேரிய கும்பல் கைது
  • BREAKING-NEWS சிகிச்சைக்குப் பின் ‘மாட்டிறைச்சி சர்ச்சை இளைஞர்’ முகமது பைசான் கைது
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளிலிருந்து காவிரிக்கு விநாடிக்கு 8,300 கன அடி நீர் திறப்பு

“மத்திய அரசுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்” - முதலமைச்சர் பழனிசாமி

edappadi-pazhanisamy-thanks-to-prime-minister-modi

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தியது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை தரும் பிரதமரின் கிசான் திட்டத்தை நிலம் வைத்துள்ள அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் விரிவுபடுத்தியதற்காக விவசாயிகளின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். 

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்ததற்கும் முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார். கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் கோமாரி வாய்சப்பை நோய், கன்று வீச்சு நோய் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கு ஆகும் மொத்த செலவையும் மத்திய அரசு ஏற்கும் என அறிவித்ததற்கும் முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். 

கடை உரிமையாளர்கள், சில்லறை வர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் செய்வோர் ஆகியோருக்கு ஓய்வூதியம் கிடைக்க வழி செய்திருப்பதற்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வர், இது ஒரு முன்னோடி திட்டம் என பாராட்டியுள்ளார். மத்திய அரசின் திட்டங்கள் சமுதாயத்தின் பல்வேறு தரப்பினருக்கும் வலுவான சமூக பாதுகாப்பை அளிக்கும் என குறிப்பிட்டுள்ளார். 

மத்திய அரசின் இந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்து, மத்திய அரசின் முயற்சிகளுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close