[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

ஓடும் பேருந்துக்குள் 'மினி தோட்டம்' - கலக்கும் அரசு பேருந்து ஓட்டுநர்!

bangalore-driver-creates-mini-garden-in-his-bus

ஓடும் பேருந்துக்குள் மினி தோட்டத்தை பராமரித்து வரும் அரசு பேருந்து ஓட்டுநரை சமூக வலைதளவாசிகள் பாராட்டி வருகின்றனர்

இயற்கையை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. மரம், செடி, கொடிகளை விரும்பும் வன ஆர்வலர்கள் தங்கள் வீடுகளைச் சுற்றி பசுமை ஆக்குகிறார்கள். இடம் இல்லாதவர்கள் கூட மொட்டை மாடியிலும், பூந்தொட்டிகளிலும் செடிகளை வளர்க்கிறார்கள். பலர் தாங்கள் வேலை பார்க்கும் அலுவலகங்களில் கூட சிறிய அளவிலான செடிகளை வளர்ப்பார்கள். இப்படி இருக்க இயற்கை ஆர்வலரான பேருந்து ஓட்டுநர் ஒருவர், தான் ஓட்டிச் செல்லும் பேருந்திலேயே மினி தோட்டத்தை பராமரித்து வருகிறார். அந்த தோட்டத்துக்கு பயணிகள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பெங்களூருவில் அரசு பேருந்து ஓட்டுநரான நாராயணப்பா, பைலாசந்த்ரா - யஷ்வந்த்பூர் மார்க்கத்தில் பேருந்து ஓட்டி வருகிறார். இயற்கை மீது விருப்பம் கொண்ட அவர், சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தான் ஓட்டிச் செல்லும் பேருந்திலேயே சிறிய சிறிய செடிகளை வளர்த்து ஒரு மினி தோட்டத்தையே பராமரித்து வருகிறார். 

இது குறித்து கருத்து தெரிவித்த நாராயணப்பா, சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 3 வருடங்களுக்கு மேலாக மினி தோட்டத்தை பேருந்துக்குள் பராமரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

ஓடும் பேருந்துக்குள் இருக்கும் மினி தோட்டத்துக்கு பயணிகள் மத்தியில் மட்டுமின்றி சமூக வலைதளவாசிகள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் ஓட்டுநர் நாராயணப்பாவுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close