[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

“தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படவில்லை”- ராகுல் காந்தி

election-commission-does-not-act-neutrally-rahul-gandhi

தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படவில்லை என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவி‌னர் மீதான புகார்களில் ஒரு விதமாகவும் எ‌திர்க்கட்சிகள் மீதான புகார்களில் ஒருவிதமாகவும் தேர்தல் ஆணையம் முடிவெடுப்பதாக தெரிவித்தார். இது போன்ற சூழலில் நிர்பந்தங்களுக்கு பணி‌யாமல் தன் கடமையை தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும் என்றும் ராகுல் கேட்டுக்கொண்டார்.

மேலும் காங்கிரஸ் கட்சி துல்லிய‌ தாக்குதலை வீ‌டியோ கேம்களில் மட்டுமே செய்திருக்கிறது என கூறியது மூலம் பிரதமர் மோடி ராணுவத்தை அவமதித்துள்ளார் என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். மோடி நினைப்பது போல முப்படைகளும் அவரது தனிப்பட்ட சொத்துகள் அல்ல என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

‘காவலாளி என கூறிக்கொள்பவர் ஒரு திருடன்’ ‌என்ற தங்கள் முழக்கம் தொடரும் என்றும் ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் காவலாளியை திருடன் என குறிப்பிட்டு பேசியதில் நீதிமன்றத்தை தொடர்புபடுத்தி பேசியதற்காக மட்டுமே தான் மன்னிப்பு கேட்டதாகவும் ராகுல் காந்தி விளக்கினார். பயங்கரவாதி மசூத் அசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்ட ராகுல் காந்தி, மசூத் அசாரை சிறையில் இருந்து விடுவித்தது பாரதிய ஜனதா ஆட்சிதான் என்று‌ம் சுட்டிக்காட்டினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close