[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து
  • BREAKING-NEWS உத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்

protests-grip-lahore-after-teenage-hindu-girl-kidnapped-by-muslim-man

பாகிஸ்தானில் செல்வாக்கு மிக்க முஸ்லீம் மனிதர் ஒருவர் 17 வயது இந்து சிறுமியை கடத்திச் சென்று மதமாற்றம் செய்து திருமணம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாகிஸ்தானின் லாஹூருக்கு அருகே இருக்கும் ரஹிம் யர் கான் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை அந்த பகுதியை சேர்ந்த தாஹிர் தம்ரி என்பவர் தனது குடும்பத்தின் உதவியுடன் கடத்தி சென்றதாகவும் பின்னர் கராச்சிக்கு அழைத்து செல்லப்பட்ட அச்சிறுமி கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்பட்டு தாஹிருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடத்தி சென்ற 17 வயது சிறுமியை மீட்க வலியுறுத்தி அந்த பகுதி இந்து மதத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல்றிந்து வந்த போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வாக்குறுதி அளித்தப்பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கராச்சியில் அச்சிறுமியை தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி கூறுகையில்,  “அந்த சிறுமி இருக்கும் இடமான கராச்சி பகுதிக்கு போலீஸ் குழு சென்றுள்ளது. விரைவில் சிறுமியை கண்டுபிடித்து விடுவோம் என நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்தார். 

முன்னதாக, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ரீனா (15), ரவீனா (13) ஆகிய சிறுமிகளை கடத்தி, இஸ்லாம் மதத்துக்கு மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஹோலி பண்டிகையின் போது அவர்களைக் கடத்திய கும்பல், திருமணம் செய்து மதமாற்றம் செய்துள்ளனர் என பெண்களின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். 

இதுகுறித்த வழக்கில் அந்தப் பெண்கள் தங்களை யாரும் வலுக்கட்டாயமாக மதம் மாற்றவில்லை. சுய விருப்பத்தின் பேரிலேயே திருமணம் செய்து கொண்டோம் எனத் தெரிவித்திருந்தனர்.

இதை விசாரிப்பதற்காக, தலைமை நீதிபதி அதார் மினல்லா தலைமையில் ஐந்து பேர் கொண்ட கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் விசாரித்து, இந்து சிறுமிகள் கட்டாய மதமாற்றம் செய்யப்படவில்லை என்றும் அவர்கள் தங்கள் விருப்பப்படி கணவர்களுடன் வாழலாம் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close