[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

'வறுமைக்காக உயிரை பணயம் வைத்தோம்' மேகாலயா நிலக்கரி சுரங்க விபத்தில் தப்பியவர் தகவல் !

all-men-knew-water-could-gush-in-meghalaya-mine-accident-eyewitness

சுரங்கத்தின் உள்ளே தண்ணீர் புகும் என தெரிந்தே அனைவரும் சென்றோம் என மேகாலயா சுரங்க விபத்தில் இருந்து தப்பித்த சாயிப் அலி திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். 

மேகாலயாவின் கிழக்கு பகுதியில் உள்ளது, ஜைன்டியா மாவட்டம். மலைபிரதேசமான இங்கு ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. அனுமதி பெறாத சுரங்கங்களும் உள்ளன. இதில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இங்குள்ள சான் கிராமத்தில் அமைந்துள்ள சுரங்கத்தில் அருகில் உள்ள ஆற்றில் இருந்து தண்ணீர் புகுந்தது. 370 அடி ஆழ சுரங்கத்தில் சுமார் 70 அடிக்கு தண்ணீர் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. நிலக்கரி சுரங்கத்தில் தண்ணீர் நுழைந்ததும் 5 தொழிலாளர்கள் வெளியேறினர். மேலும் 13 பேர் அங்கு சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து போலீசாரும், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சுமார் 100 பேர் விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினர். சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்பதற்கான முயற்சி நடந்து வருகிறது. முதலில் சுரங்கத்தை சூழ்ந்தி ருக்கும் தண்ணீரை வெளியேற்றும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். கைவிடப்பட்ட அந்த நிலக்கரி சுரங்கம், கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சட்ட விரோதமாக செயல்பட துவங்கியிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதை நடத்தி வந்த லும்தாரி கிராமத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் சுக்லைன் தலைமறைவாகி விட்டார். இவரது கூட்டாளியான ஜிரின் சுல்லர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் துரதிர்ஷ்டவ சமானது என்று மாநில முதலமைச்சர் கான்ராட் கே. சங்க்மா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், 3 ஹெல்மெட்களை கண்டு எடுத்துள்ளனர். ‘சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறோம். தேசிய பேரிடர் மீட்பு குழு பல நவீன உபகரணங்களை கொண்டு வந்துள்ளது. அதன்மூலம் தொடர்ந்து முயற்சி செய்துவருகிறோம். துரதிர்ஷ்டவசமாக இதுவரை எந்த உடலையும் நாங்கள் பார்க்க முடியவில்லை. ஆற்றின் தண்ணீர் சுரங்கத்துக்குள் செல்வ தால் தண்ணீரின் அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனால் எங்கள் சவாலை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்’ என்றார் கிழக்கு ஜைன்டியா ஹில்ஸ் எஸ்.பி சில்வெஸ்டர் நாங்டின்ஞ்சர்.

இந்நிலையில் என்டிடிவி செய்தி ஊடகத்துக்கு பேட்டியளித்த சயிப் அலி " நிலக்கரி சுரங்கத்தில் இறங்கும்போதே நாங்கள் கவனித்தோம். அந்த இடம் லேசாக சகதியாக இருந்தது. நிலக்கரி சுரங்கத்தின் உள்ளே தண்ணீர் லேசாக கசிவதையும் கண்டோம். அப்போதே நிலக்கரி சுரங்கத்துக்குள் வெள்ளம் புகும் என்றே அறிந்திருந்தோம். சுரங்கத்தில் இறங்கிய அனைத்து கூலிகளுக்கும் தெரியும், நிச்சயம் வரும் என்று தெரியும். உயிருக்கு ஆபத்து என்றும் தெரியும். ஆனால் வறுமை காரணமாகவே நாங்கள் சென்றோம்" என கவலையாடு தெரிவித்தார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close