[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

நட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியால் மிரட்டிய முன்னாள் எம்.பி. மகன்!

bsp-leader-s-son-caught-on-camera-brandishing-gun-outside-delhi-5-star-hotel

ஐந்து நட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியை காட்டி முன்னாள் எம்.பி-யின் மகன் மிரட்டும் வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

தலைநகர் டெல்லியில் உள்ள ஹயாத் ஐந்து நட்சத்திர ஓட்டலின் வாசலில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியை காட்டி, ஒரு இளம் ஜோடியை மிரட்டும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில், டிசர்ட் மற்றும் பிங்க் நிற பேன்ட் அணிந்திருக்கும் ஒருவர், ஒரு ஜோடியுடன் தகராறில் ஈடுபடுகிறார். அந்த இளம் பெண் மிரட்டும் நபரை தள்ளிவிடுகிறார்.

பின்னர் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு அந்த ஜோடியை அவர் மீண்டும் மிரட்டுகிறார். இப்போது துப்பாக்கி வைத்திருப்பவரின் தோழி காரில் இருந்து இறங்கி வந்து அந்த ஜோடியிடம் ஏதோ சொல்கிறார். அருகில் இருந்த ஒருவர் ஓடி வந்து துப்பாக்கி வைத்திருப்பவரை சமாதானப்படுத்தி  தனியே அழைத்துச் செல்கிறார். இதற்குள் ஓட்டல் ஊழியர்களும் வருகின்றனர்.

பின்னர் துப்பாக்கி நபர் சொகுசு காரில் ஏறி அமர்ந்துகொண்டு ஏதோ திட்டுகிறார். அந்த காரில் அவருடன் மேலும் சில இளம் பெண்களும் இருக்கின்றனர். 10 நொடி வரை ஓடும் இந்த வீடியோ, கடந்த சனிக்கிழமை நள்ளிரவு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், துப்பாக்கியை காட்டி மிரட்டியவர் யார் என்று தேடி வந்தனர். இந்நிலையில் துப்பாக்கியுடன் இருப்பவர் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.பி, ராகேஷ் பாண்டேவின் மகன் ஆசிஷ் பாண்டே என்பது தெரிய வந்துள்ளது. இவரது சகோதரர் உத்தரபிரதேச மாநில எம்.எல்.ஏவாக இருக்கிறார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close