[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்
  • BREAKING-NEWS தென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்
  • BREAKING-NEWS பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்

சபரிமலைக்கு பெண் காவலர்களை கொடுத்து உதவுங்கள் கேரள அரசு கடிதம் ! 

to-help-women-police-to-sabarimala

சபரிமலையில் பணியாற்ற பெண் காவலர்களை கொடுத்து உதவுமாறு தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு கேரள அரசு கடிதம் எழுதியுள்ளது

அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 28ஆம் தேதி வரலாற்றுத் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக சபரிமலை தேவஸம் போர்டு தெரிவித்தது. இதனையடுத்து பெண்களை அனுமதிக்கு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸம் போர்டின் தலைவர் பத்மகுமார் தெரிவித்தார். இதனிடையே,கேரள முதல்வர் பினராயி விஜயன், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என்று தெரிவித்தார். மேலும் சபரிமலை கோயிலுக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பும், வசதியும் செய்து கொடுக்கப்படும் எனவும் கூறினார். 

இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் சபரிமலையில் பணியாற்ற பெண் காவலர்களை பாதுகாப்புக்கு அனுப்பக்கோரி தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு கேரள அரசு கடிதம் அனுப்பியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று பெண் பக்தர்களை அனுமதிக்க தேவசம் போர்டு முடிவு செய்து, நவம்பர் மாதம் நடைபெறும் விழாவில் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க தலா 30 பெண் காவலர்களை அனுப்பக்கோரி தமிழகம், புதுவை, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு கேரள அரசு தலைமை செயலர் கடிதம் அனுப்பி உள்ளார்.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close