[X] Close
JUST IN
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...
  • BREAKING-NEWS வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை

சாலை குழி விபத்துகளால் அதிகரிக்கும் உயிரிழப்பு.. உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

potholes-killing-more-than-terrorism-it-is-frightening-sc

சாலைகளில் உள்ள குழிகளால் ஏற்படும் விபத்துகள் குறித்து உச்சநீதிமன்றம் மாநில அரசுகளை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளி விவரத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு சாலைகளில் உள்ள குழிகளால் ஏற்பட்ட விபத்துகள் மூலம் 3,597 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையில் மாநில அரசுளை உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

சாலை குழி விபத்துகளால் இத்தனை பேர் உயிரிழந்தும் மாநில அரசுகள் ஏன் இன்னும் அதனை சரிசெய்ய மாற்று நடவடிக்கைகளை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம் சில அறிக்கைகளையும் சுட்டிக்காட்டியது. அதாவது கடந்த ஆண்டு தீவிரவாத தாக்குதல் மூலம் 803 பேர் உயிரிழந்த நிலையில் அதேசமயம் சாலையில் உள்ள குழிகளால் ஏற்படும் விபத்துகளால் 3,597 பேர் உயிரிழந்திருப்பதையும் சுட்டிக்காட்டியது. சாலை குழி விபத்துகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தது.

மாநில அரசுகளால் சாலைகளை பராமரிக்க முடியாது என எப்படி சொல்ல முடியும் என கேள்வி கேட்ட உச்சநீதிமன்றம், சாலைகளை பராமரிக்க பணம் இல்லையென்றால் ஏன் சாலைகளை போட ஒப்பந்ததாரர்களுக்கு பணம் கொடுக்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பியது. அத்தனை சாலைகளையும் இடித்துவிட முடியுமா என்றும் உச்சநீதிமன்றம் கேட்டது. மாநில அரசுகள் என்ன தான் செய்து கொண்டிருக்கின்றன.. சாலைகளை யார்தான் பராமரிக்கிறீர்கள் என கேட்ட உச்சநீதிமன்றம் மக்கள் தான் சாலைகளை பராமரிக்க வேண்டும் என கருதுகிறீர்களா எனவும் கேள்வி எழுப்பியது. அப்போது அதிகாரிகள் இந்த பிரச்சனையை சுட்டிக்காட்டவில்லை என தெரிவித்த வழக்கறிஞர், இதுதொடர்பான கூட்டத்தில் சாலை குழிகளை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close