[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்
  • BREAKING-NEWS சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்
  • BREAKING-NEWS கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது
  • BREAKING-NEWS இலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

கணவருக்கு ’தலாக்’ கூறிவிட்டு காதலருடன் சென்ற மனைவி!

woman-gives-triple-talaq-to-husband

ஹரியானாவைச் சேர்ந்த பெண், முத்தலாக் கூறி, கணவனை விவாகரத்து செய்துவிட்டு காதலனுடன் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமில் மனைவியுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லாத கணவன், மூன்று முறை தலாக் என்று கூறி விவகாரத்து பெறும் நடைமுறை இருக்கிறது. இப்படி விவாகரத்து பெறுவது, அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது என கூறி இதைப் பின்பற்ற உச்சநீதிமன்றம் தடை விதித்தது. முத்தலாக் முறையை ஒழிக்கும் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேறியது. திருத்தம் செய்யப்பட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 

இந்நிலையில், ஹரியானாவில் உள்ள வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது. அன்ஹேதி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஷாசியா. இவரது கணவர் அப்பாஸ். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அப்பாஸ், அடிக்கடி குடித்துவிட்டு வந்து ஷாசியாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதையடுத்து எதிர்வீட்டில் வசித்த திருமணமாகாத இளைஞனுக்கும் ஷாசியாவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து ஒரு பேப்பரில், மூன்று முறை தலாக் என்று எழுதி வைத்துவிட்டு, காதலருடன் ஓடி விட்டார். வழக்கமாக கணவர் சொல்லும் முறையை இவர் பின்பற்றி விவாகரத்து கோரிய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 .

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close