[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்
  • BREAKING-NEWS 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி

பிரின்சிபல் உட்பட 18 பேர் பாலியல் வன்காடுமை செய்த விவகாரம்: சிறுமி வாக்குமூலத்தில் அதிர்ச்சி!

principal-raped-me-days-after-his-minor-son-did-alleges-class-10-bihar-student

பாலியல் வன்கொடுமை நகரங்களாக மாறி வருகிறது வடமாநிலங்கள். தினமும் பல்வேறு வழக்குகள்  இது தொடர்பாக பதிவு செய்யப்ப டுகின்றன. உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்தக் குற்றங்கள் அதிகம் என்கிறது ஒரு புள்ளி விவரம். இந்நிலையில் இந்த மாநிலங்களை எல்லாம் மிஞ்சி விடும் போலிருக்கிறது பீகார். அந்த மாநிலத்தில் கொஞ்சம் அதிகமாகவே நடக் கிறது, பாலியல் குற்றங்கள். இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக 127 பாலியல் குற்ற ங்கள் நடந்துள்ளன. அடுத்த மூன்று மாதத்தில் அதாவது ஜூன் வரை இந்த எண்ணிக்கை அப்படியே இரண்டு மடங்காக உயர்ந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் 10-ம் வகுப்பு மாணவியை பிரின்சிபல், ஆசிரியர்கள் உட்பட 18 பேர் சீரழித்த விவகாரத்தில் மாணவியின் வாக்குமூலம் போலீ சாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தின் சப்ராவில் உள்ளது தீபேஷ்வர் கியான் நிகேதன் பள்ளி. இங்கு 10-ம் வகுப்பு படித்து வந்தார் சிறுமி ஒருவர். இவரது தந்தை கடந்த டிசம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஏழு மாதத்துக்குப் பிறகு சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரிடம் கதறி அழுத சிறுமி, கடந்த ஏழு மாதங்களில் 18 பேர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறினார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை விசாரித்தார்.

முதலில், உடன் படிக்கும் மாணவன் ஒருவன் கத்தியை காட்டி மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்துள்ளான். அதை மற்ற நண்பர்களுக்கு அனுப்பியுள்ளான். அதைப் பார்த்த அவர்கள், ’இதை வெளியே சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால்...’ என்று மிரட்டியே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த வீடியோ பிரின்சிபலுக்கும் சென்றது. விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவரும் உடன் பணியாற்றிய மேலும் இரு ஆசிரியர்களும் சேர்த்து சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின் அந்த வீடியோ அப்படி யே மற்ற மாணவர்களுக்கும் பரவி மொத்தம் 18 பேர் அந்தச் சிறுமியை சீரழித்துள்ளனர். செய்வதறியாது திகைத்த அந்தச் சிறுமி இதை யாரிட ம் சொல்வது என்று தெரியாமல் தினமும் தவித்திருக்கிறார்.

இதைக் கேட்டு கொதித்துப் போன சிறுமியின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. மேலதிகாரி யிடம் சென்று புகார் கொடுக்கப் போவதாகக் கூறிய பின் வழக்குப் பதிவு செய்த போலீசார், பிரின்சிபல் உதய்குமார் என்ற முகுந்த்ஜி, மற்றும் 6 மாணவர்களை கைது செய்துள்ளனர். 

பள்ளியின் பிரின்சிபலும் ஆசிரியர்களும் சேர்ந்தே சிறுமியை சீரழித்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் சிறுமி கொடுத்துள்ள வாக்குமூலம் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

‘என்னை பள்ளி கழிவறையில் வைத்து சில மாணவர்கள் ஒவ்வொருவராக பாலியல் வன்கொடுமை செய்தனர். அதில் பிரின்சிபலின் மகனும் இருந்தான். பிறகு ரத்தம் படிந்த உடையோடு வெளியே வந்தேன். அதை பார்த்த பிரின்சிபல் அவரது அறைக்கு அழைத்தார். நடந்ததை அவரி டம் கூறி அழுதேன். என்னை சிரழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, ‘இதை யாரிடமும் சொல்லக் கூடாது’ என்று எச்சரிக்கை செய்தார். பின்னர் அவரது அறையில் இருந்த வாஷ்ரூமில் ரத்தத்தை கழுவச் சொன்னார். கழுவினேன். ’வீட்டுக்குப் போய்விடு’ என்றார். வந்துவிட்டேன். பத்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்குச் சென்றேன். பிரின்சிபல் அவரது அறைக்கு அழைத்தார். போனேன். அப்போது அங்கு என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். நான் தப்பிக்க நினைத்தேன். மறுத்தால் என் வாழ்க்கையை நாசமாக்கிவிடுவதாக மிரட்டி, ஆசையை தீர்த்துக்கொண்டார்’ என்று கூறியுள்ளார். 

இந்தச் சம்பவத்தில் தலைமறைவான மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close