[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

வங்கிகளில் கடன் பெற்று தலைமறைவாவது நாட்டுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம் - குடியரசுத் தலைவர்

white-collar-crimes-president-ram-nath-kovind-says-relevant-to-ask-if-those-auditing-balance-sheets-have-truly-done-their-duty

வங்கிகளில் பெருமளவு கடன்பெற்றுவிட்டு தலைமறைவாவது நாட்டுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் 75 வது ஆண்டு விழாவில் பேசிய ராம்நாத் கோவிந்த், வங்கி மோசடிகளை சுட்டிக்காட்டினார். வங்கிகளில் பெருமளவு தொகையை கடன் பெற்றுவிட்டு தலைமறைவாவது உண்மையான குடிமகன்களுக்கும் அவர்கள் நாட்டின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் செய்யும் துரோகம் என அவர் தெரிவித்தார். 

இது போன்ற பொருளாதார குற்றங்களை தடுக்க ‌பட்டய கணக்காளர்கள் நேர்மையுடனுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், பொருளாதார வளர்ச்சியில் பல்வேறு சாதனைகளை படைக்க ஜிஎஸ்டி உதவி வருவதாகவும் கூறினார். பொருளாதாரம் குறித்த கல்வியில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்த வேண்டும் எனவும் குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் கேட்டுக்கொண்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close