[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

பேருந்து கவிழ்ந்து 40 பேர் பரிதாப பலி!

40-dead-many-injured-as-bus-falls-in-gorge-in-uttarakhand

உத்தராகண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்தனர்.

 உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள போவன் பகுதியிலிருந்து ராம்நகர் என்ற பகுதிக்கு சிறிய பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பவுரி கர்வால் மாவட்டத்தில் உள்ள நனிதானா மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 40 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 12 பேர் படுகாயமடைந்தனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவ மனையி ல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பேருந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட் டுள்ளனர். அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதே இந்த விபத்துக்கு காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close