[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டதாக மேலும் 68 பேர் கைது- தூத்துக்குடி காவல்துறை
  • BREAKING-NEWS வடகொரியாவுடன் நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை ரத்து - அமெரிக்கா
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட வாய்ப்பு இல்லை; அரசின் எண்ணமும் அதுதான் - ஆட்சியர் சந்தீப் நந்தூரி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து பெங்களூருவில் உள்ள வேதாந்தா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள்
  • BREAKING-NEWS அரசு, நீதிமன்ற அனுமதி பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம்- ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால்
  • BREAKING-NEWS தூத்துக்குடி அண்ணாநகரில் ஆயுதம் ஏந்திய 100க்கும் மேற்பட்ட கமாண்டோ படை வீரர்கள், 500க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பு
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் பிரேத பரிசோதனை அறிக்கையை மே 30ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம்

“எடியூரப்பா மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்” சித்தராமையா

karnataka-elections-2018-siddaramaiah-says-victory-in-karnataka-will-be-stepping-stone-for-the-upcoming-lok-sabha-elections-in-2019

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி அறுதிப்பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று முதலமைச்சர் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில், சிமோகா தொகுதிக்கு உட்பட்ட ஷிகர்பூர் வாக்குச்சாவடியில் எடியூரப்பா தனது வாக்கைப் பதிவு செய்தார். முன்னதாக சிகார்புரில் உள்ள கோயிலுக்குச் சென்று எடியூரப்பா வழிபாடு செய்தார். 

இந்நிலையில் மைசூருவின் வருணா என்ற இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, எடியூரப்பா மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தலில் 120 இடங்களுக்கும் அதிகமாக வெற்றிபெற்று காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சாமுண்டீஸ்வரி தொகுதியில் முதலமைச்சர் சித்தராமையா தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close