[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

மொழிப் புரியாத மாநிலங்களில் தவித்த தமிழக மாணவர்கள்

tamilnadu-students-who-do-not-understand-language

மருத்துவப் படிப்புகளுக்கான தகுதிகாண் நுழைவுத் தேர்வான நீட் தேர்வை எழுத, தமிழகத்திலிருந்து 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் வெளிமாநிலங்களுக்குச் சென்றுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 170 மையங்களில் ஒரு லட்சத்து ஏழாயிரத்து 288 பேர் தேர்வு எழுதும் நிலையில், கூடுதலாக 5 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கேரளாவில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜஸ்தான், புனே போன்ற இடங்களிலும் தமிழக மாணவர்களுக்கு நீட் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வுக்கு முன்பாக நீண்ட தூரம் பயணப்பட்டு, அந்தந்த மாநிலங்களுக்கு மாணவர்கள் சென்று சேர்ந்தனர். நாளை தேர்வு எழுத உள்ள நிலையில், மொழிப் புரியாத வெளிமாநிலங்களில் தங்குமிடம், தேர்வு மையத்தைத் தேட வேண்டிய நிலையில் மாணவர்களும், உடன் சென்றோரும் தவித்தனர். பெரும்பாலான மாணவர்களுக்கு, அந்தந்த மாநிலங்களில் உள்ள தமிழர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். தங்குமிடம், போக்குவரத்து வசதிகள், உணவு போன்றவற்றை வழங்கி, மாணவர்கள் படிக்க ஏற்பாடு செய்துள்ளனர். ஆனாலும், தாமதமாகச் சென்ற ஒரு சிலருக்கு உதவிகள் கிடைப்பதில் சிரமங்கள் இருந்தன. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close