[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

பசுவை கொன்று தின்னும் சிங்கங்கள்: வீடியோ பதிவிட்ட நபர் கைது 

gujarat-video-of-lion-show-with-live-bait-goes-viral

 

குஜராத் மாநிலத்தில் மூன்று பெண் சிங்கங்கள் உயிருடன் இருக்கும் பசுவை கொன்று தின்னும் வீடியோ காட்சியை வைரலாக்கிய நபர் கைதாகியுள்ளார். 

குஜராத்தில் புகழ் பெற்ற கிர் வனவிலங்குகள் சரணாலயத்தில் தண்ணீருக்காக சுற்றித் திரிந்த பசுவை மூன்று பெண் சிங்கங்கள் சுற்றி வளைத்து கொன்றது. இந்தக் காட்சி எங்கு, எப்போது எடுக்கப்பட்டது போன்ற தகவல்களுடன் இளைஞர் ஒருவர் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார். இது வைரலான நிலையில் சரணாலய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில் சுற்றுலா சென்ற கிர் வனவிலங்கு சரணாலயத்தின் முன்னாள் ஊழியரின் மகன் சேஹேல் கர்ணா இந்தக் காட்சியை எடுத்தது தெரியவந்தது. அவரிடம் இதே போல் 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அனுமதியின்றி வீடியோ எடுத்த குற்றத்துக்காக சேஹேல் கர்ணா உள்பட ஆறு நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close