[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி

ரியான்ஸ் மாணவன் கொலை வழக்கு: சிறார் குற்ற விசாரணை ஆணையம் புதிய உத்தரவு

new-turning-point-in-ryan-s-school-student-murder-case

ஏழு வயது சிறுவனை பள்ளியில் வைத்து கொலை செய்த 11 ஆம் வகுப்பு மாணவரை சிறார் குற்றப்பிரிவில் வைத்து விசாரிக்கக்கூடாது என்று சிறார் குற்ற விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

குர்கானில் உள்ள ரியான்`ஸ் சர்வதேசப் பள்ளியில் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி 7 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தது. பள்ளியின் கழிவறையில் 2 ஆம் வகுப்பு மாணவன் பிரத்யூமன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்தான். நாட்டையே அதிர வைத்த இந்த கொலை சம்பவத்தில் 14 சிறப்பு அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டு பள்ளி வாகன ஓட்டுநர் அசோக்குமார் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்‌றப்பட்ட நிலையில், அவர்கள் நடத்திய விசாரணையில் 11 ஆம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டான்.

படிப்பில் மிகவும் பின்தங்கிய அந்த மாணவன், தேர்வை தள்ளிவைக்கவும், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தை ஒத்திவைக்கவும் செப்டம்பர் 8 ஆம் தேதி ஒரு கொலையை செய்ய திட்டமிட்டதாகவும், அந்த நேரத்தில் பிரத்யூமன் கழிவறைக்கு வந்ததால் அவனை கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் பிடிபட்ட மாணவன் தெரிவித்துள்ளான். 15 வயது சிறுவன் என்பதால் சிறார் குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை எதிர்த்து சிறார் குற்ற விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 11 ஆம் வகுப்பு மாணவன் மீது சிறார் குற்றப்பிரிவில் விசாரிக்கக்கூடாது என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திட்டமிட்டு கொடூரமான செயலை செய்துள்ள சிறுவனை இளைஞராக கருதி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நிர்பயா கொலை வழக்கில், 17 வயதுக்குட்பட்ட நபர்தான் கொடூரமான முறையில் நடந்துகொண்டதாக கூறப்பட்ட நிலையிலும், அவரை சிறார் குற்றப்பிரிவிலேயே வைத்து விசாரித்து அதற்கேற்ற தண்டனையே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close